
மார்ச் 21, சென்னை (Television & OTT News): கொரிய மொழி எழுத்தாளர் சுகாங் (Chugong) கற்பனையில் உருவான சோலோ லெவலிங் (Solo Leveling) எனப்படும் அனிமேஷன் கற்பனை தொடர், உலகளவில் பிரபலமாகி இருக்கிறது. இதன் முதல் சீசன் வெளியாகி மிகப்பெரிய அளவு வெற்றி கிடைத்த நிலையில், தற்போது சோலோ லெவலிங் சீசன் 2: அரைஸ் (Solo Leveling Season 2: Arise from the Shadow) ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதன் ஓடிடி வெளியீடு உரிமைகளை கிரன்சிரோல் (Crunchyroll) எனப்படும் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. மர்மங்கள் நிறைந்த குகையில் வாழும் மாயாஜால விலங்குகள் மற்றும் அரக்கர்களை, அதீத உடல் ஆற்றல் மற்றும் மாயஜாலம் கொண்டு எதிர்க்கும் நாயகர்களை மையப்படுத்தி கதை அமைந்துள்ளது. இந்த கதையின் முக்கிய நாயகனாக சுங் ஜின் வூ (Sung Jinwoo) இருக்கிறார்.
சுவாரசியத்தை தரும் அனிமி:
தொடக்கத்தில் உடலில் ஆற்றல் இல்லாமல், மர்மங்கள் நிறைந்த குகைக்குள் சென்று உயிர்பிழைத்து வரும் வூ, பின் எப்படி உயர்நிலை பொறுப்புக்கு சென்றார். அவருக்கு அந்த ஆற்றலுடன் என்னென்ன சக்திகள் கிடைத்தது? அதனை எப்படி பயன்படுத்தினார் என விறுவிறுப்பு கொண்ட காட்சிகளுடன் சோலோ லெவலிங் எபிசோட்கள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இ ரேங்கில் இருந்த ஜின் வூ, படிப்படியாக முன்னேறி, தன்னை உயர்ந்த தரம் கொண்ட வீரர் என்பதை அடையாளப்படுத்தும் பல நபர்களின் உயிரை காப்பாற்ற, ஒருகட்டத்தில் அவரின் உண்மை முகம் வெளிப்படுகிறது. இதற்கு பின் நடந்தது என்ன? என்பது ஒவ்வொன்றையும் படைப்பாளர்கள் சுவாரஸ்யத்துடன் சொல்லி இருப்பார்கள். Thoothukudi Kothanar Song: தூத்துக்குடி கொத்தனார் பாடல்; ஒரிஜினிலை சீரழித்த டூப்ளிகேட்..!
ஷேடோ வீரர்கள்:
அந்த வகையில், இதுவரை சோலோ லெவலிங் சீசன் 2-ல் 11 எபிசோட்கள் வெளியாகிவிட்டன. இதில் 6 வது எபிசோட் மீது இருந்த தாக்கம், உலகளவில் கிரன்சிரோல் சர்வரை முடக்கும் அளவு சென்றது. அபரீதமான பயனர்கள், சோலோ லெவலிங் அனிமேஷனை வெளியிடும் கிரன்சி ரோல் ஓடிடி தளத்தில் குவிந்ததால், சர்வர் முடங்கும் நிலையும் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த எபிசோடை பொறுத்தமட்டில், எறும்புகளின் ராணியை வேட்டைக்காரர்கள் கொன்றுவிட, எறும்புகளின் ராணி உருவாக்கிய பெரு எனப்படும் பிளாக் எறும்பு (Black Ant Beru), மக்களுக்காக போராடும் பெரும்பாலானோரை கொன்று விடுகிறது. அவர் ராஜாவுடன் சண்டையிடவேண்டும் என ஆவலுடன் இருக்கிறார். ஏற்கனவே தனது ஷேடோ வீரர்களை, சக வீரர்களுக்கு தெரியாமல் நிழலில் புகுத்திவிட்ட சுங் வூ (Beru VS Sung Jinwoo), அவர்களின் இறுதி தருவாயில் வெளிப்பட்டு அவர்களை காப்பாற்றும் வகையில் உத்தரவிட்டு இருந்தார். பெருவிடம் சண்டையிட்ட பலரும் வீழ்ந்துவிட, இறுதிக்கட்டத்தை நிழல் காப்பாளர்கள் (Sung Jinwoo Shadow Army) வெளிப்பட்டு உணர்த்தினர். இதனால் நிலைமையை புரிந்துகொண்ட ஜின் வூ எக்சேஞ் (Jinwoo Exchange) என கூறியதுடன் கடந்த எபிசோட் நிறைவு பெற்றது.
எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள சோலோ லெவலிங் எபிசோட் 12 (Solo Leveling Season 2 Episode 12):
இது அடுத்த எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பை பார்வையாளர்கள் இடையே ஏற்படுத்திஉள்ளது. இதனால் சோலோ லெவலிங் தாக்கம் நாளை மீண்டும் சர்வர் கிராஷ் தொடர்பான தொழில்நுட்ப பிரச்சனையை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கிரன்ஷிரோல் நிர்வாகமும் தொழில்நுட்ப கோளாறை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கிறது. சோலோ லெவலிங் எபிசோட் போல, இதற்கு முன்பு டீமன்ஸ் ஸ்லேயர், ஒன்பீஸ், அட்டாக் ஆன் டைட்டன் ஆகிய அனிமேஷன் தொடர்களின் சர்வரும் கடந்த காலங்களில் அதீத எதிர்பார்ப்பு காரணமாக, அதிக பயனர்கள் அணுகி முடங்கி இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வாரம் சனிக்கிழமை அன்று, இந்திய நேரப்படி இரவு 08:30 மணியளவில் கிரன்ஷி ரோல் தளத்தில் ஜப்பானிய மொழியில் எபிசோட் வெளியாகும். பின் படிப்படியாக பிராந்திய மொழிகளிலும் சில நாட்கள்/வாரங்கள் இடைவெளியில் வெளியீடு செய்யப்படும். மொழிகளை கடந்து காட்சிகளே நமக்கு அதனை புரிய வைத்திடும். சர்வதேச அளவில் அமேசான் ப்ரைம் (Amazon Prime), நெட்பிளிக்ஸ் (Netflix), ஹுலு (Hulu) ஆகிய தளங்களிலும் பார்க்கலாம்.
நாளை கிரன்சிரோல் சர்வரை நினைத்து கண்ணீர் விடுவதாக ரசிகர் விமர்சனம்:
View this post on Instagram
சோலோ லெவலிங் சீசன் 2 எபிசோட் 6 சர்வரை முடக்கிய செய்தி:
View this post on Instagram
சுங் ஜின்வூ Vs பெரு சண்டை காட்சிகள் தொடர்பான எதிர்பார்ப்பு பதிவு:
Solo Leveling Season 2 Episode 12 (Sung Jinwoo Vs. Beru) Preview!
• Ep 12 Air On March 22, 2025 pic.twitter.com/96XZcT3BI5
— Anime & Manga News (@Anime_Caliber) March 21, 2025
சோலோ லெவலிங் எக்சேஞ் (Solo Leveling Exchange):
Get ready for the ultimate showdown! 🔥
"Exchange" #SoloLeveling
Beru VS Sung Jinwoo pic.twitter.com/fSHVYrbmJS
— 𝓐𝓫𝓲𝓴𝓪𝓼𝓱 (@Abikash1234) March 15, 2025