Thoothukudi Kothanar Song (Photo Credit: YouTube)

மார்ச் 19, சென்னை (Chennai News): தமிழகத்து நெட்டிசன்களிடம் கடந்த சில நாட்களாகவே மிகப்பெரிய அளவில் வைரலாகி இருக்கிறது தூத்துக்குடி கொத்தனார் (Thoothukudi Kothanar Song) என்னும் பாடல். தனியார் யூடியூப் சேனலில் எடுக்கப்பட்டு வெளியான பாடல் ஒன்றை, முழுக்க முழுக்க கருத்துக்களில் வந்த தகவலை வைத்து, அருவெறுக்கத்தக்க வகையில் ஆபாசமான பாடல் ஒன்றை உருவாக்கி வெளியிட்டு இருக்கின்றனர். கொத்தனார் - சித்தாள் இடையே நடக்கும் ஒரு காதலை மையப்படுத்தி, கொத்தனார் சித்தாளுக்காக கட்டிய வீட்டினை மையப்படுத்தி பாடல் உருவாகி இருந்தது. இந்த பாடலின் பதிப்பை அப்படியே மாற்றும் விதமாக, சில விஷமத்தனம் கொண்ட நபர்கள் பாடலை வெளியிட்டு இருக்கின்றனர். பெண் ஒருவர் சர்ச்சை வார்த்தையுடன் பேசியத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரின் பாணியில் கருத்துக்களை பதிவு செய்த நபர்களின் வரிகளை வைத்து ஆபாசமான பாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது.  Courage the Cowardly Dog: 90 கிட்ஸ்-களே நினைவிருக்கா? கார்டூன் டிவியின் 'கரேஜ்' எழுத்தாளர் மரணம்; புற்றுநோயால் சோகம்.! 

ஏஐ தொழில்நுட்பத்துடன் தொடரும் சவால்கள்:

இந்த விசயத்துக்கு மூலகாரணமாக, இணையத்தின் வருகைக்கு பின்னர் புதுமையான யோசனைகள் உலகளவில் இருந்து கிடைக்கின்றன. அதேபோல, வெளிநாட்டில் பதிவர்களின் கருத்தை மட்டும் மையப்படுத்தி ஆபாசமான வார்த்தைகளை, ஆங்கில மொழி பாடல்களாக வெளியிட்டு வைரலாகியதுபோல, புதிய விஷயம் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது. அதன் தொடக்கமாக தூத்துக்குடி கொடுத்தனர் பாடல் அமைத்து இருக்கிறது. இந்த பாடலின் வரிகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடந்த 12 நாட்களாக சென்றுள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. கடந்த காலங்களில் ஹரஹர மகாதேவகி என இளைஞர்கள் வெளியிட்ட ஆடியோ பெரிய அளவில் வைரலாகி, சர்ச்சையை சந்தித்து கைது நடவடிக்கை வரை சென்றது. இதனிடையே, தற்போது மீண்டும் அவ்வாறான விஷயங்கள் ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் நடக்கும் குற்றங்களை குறைக்க, இனி வரும் காலங்களில் சைபர் குற்றத்தடுப்பு பிரிவுகளை ஊக்குவிக்க அரசும் முயற்சிகளை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.

தூத்துக்குடி கொத்தனார் பாடல் (Thoothukudi Kothanar Original Song):

அனன் ட பாட் சயே பாடல் (ANAN TA PAD CHAYE Song):

தூத்துக்குடி கொத்தனார் பாடல் (Thoothukudi kothanar good version song):