Ajith Kumar Birthday Wish Poster

மே 01, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் ஜொலிக்கும் உச்ச நட்சத்திர நடிகர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள முக்கியமான நடிகர் அஜித் குமார் (Ajith Kumar). இவரை ரசிகர்கள் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் (Ultimate Star AjithKumar), தல அஜித் (Thala Ajith) என்றும் அழைப்பார்கள். கடந்த 1990ல் என் வீடு என் கணவர் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த அஜித் குமார், 1996ல் காதல் கோட்டை திரைப்படத்தில் நடித்தார். கதாநாயகனாக அதுவே அவரின் முதல் திரைப்படம் ஆகும்.

அஜித் குமாரின் முதல் திரைப்படமாக இருந்தாலும், காதல் கோட்டை அதன் கதையம்சத்தால் ஏகபோக வெற்றியை அடைந்தது. அதனைத்தொடர்ந்து அவள் வருவாளா, காதல் மன்னன் (Kadhal Mannan), அமர்க்களம், வாலி, சிட்டிசன் (Citizen), வரலாறு, பில்லா (Billa), மங்காத்தா, வீரம் (Veeram), என்னை அறிந்தால், வேதாளம், நேர்கொண்ட பார்வை, விவேகம் (Vivegam), விஸ்வாசம், துணிவு (Thunivu) உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

இவரின் நடிப்புக்காக 4 விஜய் அவார்ட்ஸ் (Vijay Awards), தலா 3 சினிமா எக்ஸ்பிரஸ் அவார்ட்ஸ் (Cinema Express Awards), பிலிம்பேர் அவார்ட்ஸ் (Flimfare Awards), தமிழ்நாடு மாநில அரசு விருதுகள் (Tamilnadu State Cinema Awards) உட்பட பலவற்றை பெற்றுள்ளார். அதேபோல, அஜித் குமார் தொடக்க காலத்தில் பார்முலா கார் ரேசர் (Car Racer) என்பதால், அவர் அதிலும் சிறந்து விளங்கி பல விருதுகளை பெற்றுள்ளார். Water Before Sleeping: இரவில் உறங்கச்செல்லும் முன் தண்ணீர் குடிக்கலாமா?.. எது நல்லது?.. அசத்தல் டிப்ஸ் இதோ.! 

Ajith Kumar With Father & Mother (Photo Credit: Twitter)

தொடக்கத்தில் தனக்கென ரசிகர் மன்றத்தை வைத்து நிர்வகித்து வந்த அஜித் குமார், பின்னாட்களில் ஏற்பட்ட ரசிகர்கள் மோதல் தொடர்பான பல்வேறு விஷயங்களால், "நீங்கள் குடும்பத்தையும், உங்களையும் கவனியுங்கள், எனது படத்தை பிடித்தால் பாருங்கள், இல்லையேல் கடந்து செல்லுங்கள், நடிப்பது எனது வேலை என்றால், உங்களின் குடும்பத்தை கவனிப்பது உங்களுக்கு முக்கியம்" ரசிகர் மன்றத்தை கலைத்து அறிவித்தார்.

அதில் இருந்து தற்போது வரை எவ்வித ரசிகர் மன்றத்தையும் அவர் அதிகாரபூர்வமாக வைக்கவில்லை. தனக்கு தெரிந்தவர்களுக்கு அல்லது தன்னிடம் உதவி கேட்பட்டவர்களுக்கு தன்னால் இயன்றதை செய்து நலமுடன் வாழ்ந்து வருகிறார். இவருக்கு நடிகை ஷாலினியுடன் கடந்த 2000ம் ஆண்டு திருமணம் நடைபெற்று முடிந்தது. தம்பதிகள் தமிழ் சினிமாவில் இன்று வரை பிரியாது உற்ற துணையாக வாழ்ந்து வருகின்றனர். Tornado Lifts Car: நிஜ காரை பொம்மை போல தூக்கியெறிந்த சூறாவளி.. பதைபதைப்பு வீடியோ வைரல்.!

இவர்களுக்கு 2 குழந்தைகளும் இருக்கின்றனர். ஹைதராபாத் நகரில் பிறந்து வளர்ந்து தமிழ் மொழி பேச தொடக்கத்தில் தயங்கிய அஜித், இன்று தமிழராக வாழ்ந்து வருகிறார். அமர்களத்தில் இருவரும் இடையே ஏற்பட்ட காதல் திருமணத்தில் முடிந்தது. பயணங்களில் விருப்பம் கொள்ளும் அஜித், படங்களில் நடித்து முடித்ததும் மனதை அமைதிப்படுத்த, உலகை அமைதியாக ரசிக்க தனது இருசக்கர வாகனத்தில் தொலைதூர பயணிகளுக்கு செல்வது வழக்கம்.

இன்று பல கோடி ரசிகர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் நடிகர் அஜித் குமாருக்கு 51 வயது ஆகிறது. வயது எப்படி இருந்தாலும், தனது இயல்பு தோற்றத்தில் மேக்கப் இல்லாமல் அவர் நடிப்பதையே ரசிகர்களும் விரும்புகிறார்கள். அவருக்கு மே 1ம் தேதியான இன்று பிறந்தநாள். ரசிகர்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.