Actor Kamal Thug life Movie (Photo Credit : @DinamaniDaily X)

ஜூன் 03, சென்னை (Cinema News): இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், நாசர், அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் தக் லைப். ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள நிலையில், படம் ஜூன் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கமல் பேசியது :

இப்படத்தின் டிரெய்லரை சமீபத்தில் படக்குழு வெளியிட்ட நிலையில், பட பிரமோஷன் பணிகளும் தீவிரமாக நடைபெற்றன. பட ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில், தமிழ் மொழியிலிருந்து கன்னட மொழி பிறந்தது என கமல்ஹாசன் கூறியிருந்தார். இதனால் கன்னட அரசியல் அமைப்பினர் பலரும் கர்நாடகாவில் படத்தை திரையிடக்கூடாது என போராடி, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர். Vikram Sugumaran: பிரபல தமிழ் இயக்குனர் மரணம்.. பட வாய்ப்புக்காக சென்றவருக்கு நேர்ந்த சோகம்.! 

படத்தின் தடையை விலக்க கோரி மனு :

இந்த தடையை விலக்கக் கோரி கமல் மனு தாக்கல் செய்த நிலையில், கர்நாடக உயர்நீதிமன்றம் கோடிக்கணக்கான மக்களின் மனதை கமல் புண்படுத்தியதாகவும், பிற்பகல் 2.30 மணிக்குள் கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கெடு விதித்திருந்தது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் கர்நாடகாவில் ஏற்பட்ட நிலையால் தான் வேதனை அடைந்ததாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் வருத்தம் :

அதில், மொழி தொடர்பான எனது பேச்சால் கர்நாடகாவில் ஏற்பட்ட நிலையால் நான் வேதனையில் உள்ளேன். நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. கன்னட மொழி மிகவும் செழுமை வாய்ந்தது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. தமிழும், கன்னடமும் ஒரே குடும்பம் என்பதை வெளிப்படுத்தவே அவ்வாறு பேசினேன். கன்னட மொழியை சிறுமைப்படுத்த வேண்டும் என நான் பேசவில்லை. பதற்றத்தை உருவாக்க நான் பேசவில்லை.

தக் லைப் பட விழாவில் எனது பேச்சால் நடிகர் சிவகுமாருக்கு ஏற்பட்ட தர்ம சங்கடத்துக்கு வருந்துகிறேன். நான் பேசியதை தவறாக புரிந்து கொண்டதை உணர்ந்து கன்னடம் மீதுள்ள எனது காதலை புரிந்து கொள்ள வேண்டும். கன்னட மொழி மீதுள்ள எனது காதலை வெளிப்படுத்தவே நான் பேசினேன்" என்றார்.

நடிகர் கமலின் அறிக்கை :