
ஜூன் 02, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் மதயானை கூட்டம், இராவண கோட்டம் ஆகிய படங்களை இயக்கி வழங்கியவர் விக்ரம் சுகுமாரன். இவரின் இரண்டு படைப்புகளுமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பட்டி தொட்டி எங்கும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற படமாக இவை அமைந்தன. கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பட வாய்ப்புக்காக தயாரிப்பாளர்களை அணுகி வந்த விக்ரம் சுகுமாரன், நேற்று முன்தினம் மதுரையைச் சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவரிடம் கதை சொல்ல நேரில் வந்துள்ளார். என்ன சாம்பார் செஞ்சிருக்க? - கணவன் கேட்ட கேள்வியால் மனைவி தூக்கிட்டு தற்கொலை.!
திடீர் மாரடைப்பால் மரணம் :
பின் அவரை பார்த்துவிட்டு இரவு நேரத்தில் சென்னைக்கு செல்ல பேருந்தில் ஏறி உள்ளார். அப்போது பேருந்து பயணத்திலேயே அவருக்கு நெஞ்சு வலி ஏற்படவே, உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவமனையில் பரிசோதனை செய்து மருத்துவர்கள், அவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை அடுத்து தகவலறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் திரையுலக நண்பர்கள் இயக்குனரின் உடலை சென்னை கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இறுதி சடங்கு குறித்த அறிவிப்பு :
சென்னையில் உள்ள மதுரவாயலில் இருக்கும் அவர்களின் இல்லத்தில் உடல் இறுதி சடங்குக்காக வைக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. விக்ரம் சுகுமாரனின் மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரபலங்கள் இரங்கல் :
#Rip dearest brother @VikramSugumara3
I’ve learnt so much from you & will always cherish every moment
Gone too soon
You will be missed #RIPVikramSugumaran pic.twitter.com/U78l3olCWI
— Shanthnu (@imKBRshanthnu) June 1, 2025
ஜூன் 2, இச்செய்தியை நிஜமாகவே என்னால் நம்ப முடியவில்லை. மதுரையில் இருந்து பஸ்சில் சென்னைக்கு வரும்போது ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, இயக்குனர் மற்றும் நடிகர் விக்ரம் சுகுமாரன் திடீரென்று மரணம் அடைந்தார்.#Madhayaanaikoottam #Raavanakottam Director
Vikram Sugumaran Passed Away pic.twitter.com/1IWR6Qfvfi
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) June 1, 2025