
ஜூன் 03, சென்னை (Cinema News): இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், நாசர், அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் தக் லைஃப். ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள நிலையில், படம் ஜூன் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கமல் பேசியது :
இப்படத்தின் டிரெய்லரை சமீபத்தில் படக்குழு வெளியிட்ட நிலையில், பட பிரமோஷன் பணிகளும் தீவிரமாக நடைபெற்றன. பட ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில், தமிழ் மொழியிலிருந்து கன்னட மொழி பிறந்தது என கமல்ஹாசன் கூறியிருந்தார். இதனால் கன்னட அரசியல் அமைப்பினர் பலரும் கர்நாடகாவில் படத்தை திரையிடக்கூடாது என போராடி, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர். IPL 2025 Final: டாடா ஐபிஎல் 2025 இறுதிப்போட்டி; ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை.. வானிலை நிலவரம், நேரலையில் பார்ப்பது எப்படி? விவரம் உள்ளே..!
படத்தின் தடையை விலக்க கோரி மனு :
இந்த தடையை விலக்கக் கோரி கமல் மனு தாக்கல் செய்த நிலையில், கர்நாடக உயர்நீதிமன்றம் கோடிக்கணக்கான மக்களின் மனதை கமல் புண்படுத்தியதாகவும், பிற்பகல் 2.30 மணிக்குள் கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கெடு விதித்திருந்தது. இதனையடுத்து நடிகர் கமல்ஹாசன் கர்நாடகாவில் ஏற்பட்ட நிலையால் தான் வேதனை அடைந்ததாக கடிதம் ஒன்றை வெளியிட்டார்.
கமல் மன்னிப்பு கேட்க மறுப்பு :
உயர்நீதிமன்ற வழக்கு விசாரணையில், கடிதத்தில் மன்னிப்பு என்ற வார்த்தையே இல்லை எனவும், எதற்காக கமலுக்கு இவ்வளவு ஈகோ? எனவும் கேள்வி எழுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து தவறு செய்தால் மட்டுமே மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், தவறாக புரிந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்க போவதில்லை என்றும் கமல் தரப்பில் ஊர்ஜிதமாக தெரிவிக்கப்பட்டது. மேலும் தக் லைஃப் படத்தின் கன்னட வெளியீட்டை தள்ளி வைப்பதாக கமல் தரப்பிலிருந்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால் உயர்நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.