![](https://objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/p/H7eKs7B2tVOw_abojbrxoIB_6t5W29G2St7cuQZAAZxzK6otiY2itlU_lhorOfFB/n/bmd8qrbo34g7/b/uploads-DataTransfer/o/cmstamil.letsly.in/wp-content/uploads/2023/03/Crime-File-Picture-Photo-Credit-PIxabay-380x214.jpg)
ஆகஸ்ட் 09, மேட்டூர் (Salem News): சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் (Mettur), கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 46). இவர் கல் உடைக்கும் தொழிலாளி ஆவார். ராஜாவின் மனைவி சரஸ்வதி (வயது 36). இவரும் கல் உடைக்கும் தொழிலாளி ஆவார்.
கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு தம்பதிகளுக்கு திருமணம் நடைபெற்று முடிந்து ரஞ்சித் என்ற 22 வயது மகனும், நந்தினி மற்றும் அஞ்சலி என 20 & 17 வயதுடைய மகள்கள் இருக்கின்றனர். நேற்று காலை நேரத்தில் தம்பதிகள் அஞ்சலியை படிக்கச் பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பின் மாலை நேரத்தில் அஞ்சலி வீட்டிற்கு வந்தபோது, வீடு உட்புறமாக தாழிடப்பட்டு இருந்துள்ளது. அவர் தனது பெற்றோரை பலமுறை அழைத்தும் பலனில்லை என்பதால், ஜன்னல் வழியே எட்டிப்பார்த்து இருக்கிறார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காட்சி ஒன்று காத்திருந்துள்ளது.
வீட்டினுள் தனது தாய் - தந்தை (Mettur Kolathur Village Couple Suicide) உயிரிழந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அவர்களை ஜன்னல் வழியே பார்த்தவாறு கதறியழ, அவரின் அழுகுரல் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் சுதாரித்துக்கொண்டு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலை அறிந்ததும் மேட்டூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரிய முத்து, கொளத்தூர் காவல் ஆய்வாளர் சுப்புரத்தினம் தலைமையிலான அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். பின் வீட்டின் கதவை உடைத்து ராஜா-சரஸ்வதி தம்பதியின் உடல் மீட்கப்பட்டது. Imran Khan: பாக். தேர்தல்களில் இம்ரான் கான் போட்டியிட தடை.. ஊழல் வழக்கில் தண்டனை உறுதியானால் அதிரடி..!
மீட்கப்பட்ட உடலை பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின், இதுகுறித்து முதற்கட்ட விசாரணை நடத்தினர். விசாரணையில், "தம்பதிகள் ராஜா - சரஸ்வதி இடையே கடந்த சில ஆண்டுகளாகவே கருத்து வேறுபாடு பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இருவரும் ஒரே வீட்டில் பிள்ளைகளுடன் வசித்துவந்தபோதிலும், பேச்சுவார்த்தையின்றி இருந்து வந்துள்ளனர். இதனிடையே, ராஜா சரஸ்வதிக்கு சாணி பவுடரை கரைத்து கொடுத்து, தானும் கேபிள் வயரால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
அவரது எடை தாங்காது கேபிள் அறுந்துவிழ, ராஜா விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்" என்பது உறுதியானது. இருவரின் தற்கொலைக்கான உண்மையான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 3 குழந்தைகளை தவிக்கவிட்டு பெற்றோர் எடுத்த சோக முடிவு பிள்ளைகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இறைவன் நமக்கு கொடுத்த உயிரை விபரீத முடிவுகளால் நாமே பறித்துக்கொள்ள கூடாது. எவ்வுளவு கஷ்டம் இருப்பினும் மனா உறுதியுடன் அதனை எதிர்கொண்டு வெற்றி அடைய வேண்டியது ஒவ்வொரு உயிரின் கடமை என்பதை ஒவ்வொருவரும் நினைத்து பார்க்க வேண்டும்.