Anshita | Bigg Boss Tamil Season 8 (Photo Credit: @VijayTelevision X)

ஜனவரி 14, ஈவிபி பிலிம் சிட்டி (TV News): விஜய் (Vijay TV) டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil) நிகழ்ச்சி, 100 நாட்களை கடந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. ரியாலிட்டி ஷோ-வான பிக் பாஸ் இன்னும் சில நாட்களில் இறுதிக்கட்டத்தை எட்டவுள்ளது. 18 போட்டியாளர்கள் பங்கேற்ற பிக் பாஸ் தமிழ் சீசன் 8 போட்டியில், இறுதிக்கட்டத்தை நோக்கிய பயணத்தில் ஜாக்குலின், முத்துக்குமரன், பவித்ரா, ராயன், சௌந்தர்யா, வர்ஷினி, விஷால் ஆகியோர் எஞ்சி இருக்கின்றனர். ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா, வர்ஷினி, ஷிவ குமார், ஆர்.ஜே ஆனந்தி, சாச்சனா, தர்ஷிகா, சத்யா, ரஞ்சித், அன்ஷிதா, ஜெப்ரி, மஞ்சரி, ராணவ், அருண், தீபக் ஆகியோர் வீட்டில் இருந்து வெளியேறி இருக்கின்றனர். பழைய போட்டியாளர்களை மீண்டும் இல்லத்திற்குள் அனுப்பி வைத்து, போட்டி மாறுபட்ட கோணத்தில் செல்கிறது. Bigg Boss Tamil Season 8: "என் வாழ்க்கையில் தலையிடாதீங்க" - ரவீந்தரைப் புரட்டி எடுத்த தர்ஷிகா.!

சௌந்தர்யாவுக்கு ஆறுதல் கூறிய அன்ஷிதா (Anshita Bigg Boss Tamil):

இந்நிலையில், இன்றைய நாளுக்கான ப்ரோமோவில், அன்ஷிதா மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றது உறுதியாகியுள்ளது. அவர் போட்டியாளர்களிடம் பேசும்போது, சௌந்தர்யாவை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறி, நீ கலங்க வேண்டாம். உன்னை விட முத்துகுமாரனின் பி.ஆர் டீம் தான் அதிகம் வேலை செய்கிறது. நீ கவலைப்பட வேண்டாம். அந்த எண்ணத்தில் இருந்து வெளியேறி வா என பேசினார். மேலும், முத்துகுமாரனை ரவீந்தர் வெற்றியாளராக வேண்டும் என விரும்பி வெளிப்படையாக பேசி வந்த நிலையில், அதனை வெளிப்படையாக கூற வேண்டாம். அது தனது விளையாட்டை மாற்றுப்பாதையில் எடுத்துச்செல்வது போல தோன்றுவதாக முத்துக்குமரன் ரவீந்தரை எச்சரிக்கிறார். இதனால் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள பிக் பாஸ் வீட்டின் இறுதி தருணங்கள் பரபரப்புடன் இருக்கின்றன.

பிஆர் டீம் தொடர்பாக அன்ஷிதா பேசும் காணொளி: