
ஜூன் 25, நுங்கம்பாக்கம் (Chennai News): சென்னை நுங்கம்பாக்கம் காவல் எல்லைக்குட்பட்ட பாரில் நடந்த தகராறு குறித்து விசாரிக்கச் சென்ற காவல்துறையினருக்கு, போதைப்பொருள் குறித்த துப்பு கிடைத்தது. இந்த விசாரணையில் ரௌடி அஜய் வாண்டையார், அதிமுக பிரமுகர் & திரைப்பட தயாரிப்பாளர் பிரசாத், கனடா நாட்டைச் சேர்ந்த ஜான், பிரதீப் என அடுத்தடுத்து பலர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடந்த விசாரணையில் தயாரிப்பாளர் பிரசாத் நடிகர் ஸ்ரீகாந்துக்கு போதைப்பொருளை கொடுத்ததாக ஒப்புக்கொண்டார். Drug Case: போதைப்பொருள் பயன்பாட்டில் பிரபலங்கள்? சீரழியும் தமிழ் திரையுலகம்.. நீளும் பட்டியல்.!
கோகைன் கொடுத்து கெடுத்தார்:
இந்த தகவலின் பேரில் நடிகர் ஸ்ரீகாந்த் விசாரணை வளையத்தில் கொண்டு வரப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தியபோது போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானது. மேலும், நடிகர் ஸ்ரீகாந்த் தயாரிப்பாளர் ப்ரசாத்திடம் படம் நடித்து வந்துள்ளார். அவரிடம் சம்பள பாக்கியை கேட்கச் செல்லும்போதெல்லாம் சிறுகச்சிறுக போதைப்பொருளை கொடுத்து ஸ்ரீகாந்தை திசைதிருப்பி இருக்கிறார். இதனால் காலப்போக்கில் ஸ்ரீகாந்தும் போதைப்பழக்கத்துக்கு அடிமையானது உறுதி செய்யப்பட்டது. இந்த தகவல் தமிழ் திரையுலகில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. Trending Video: மன அழுத்தமா கூமாப்பட்டிக்கு வாங்க.. இன்ஸ்டாவில் டிரெண்டாகும் வீடியோ.!
ஸ்ரீகாந்த் & கிருஷ்ணா கைது (Actor Srikanth Drug Case):
இதனிடையே, ஸ்ரீகாந்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நடிகர் கிருஷ்ணாவும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அவரிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டபோது தலைமறைவானார். இதனால் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கிருஷ்ணாவை தேடி வந்த நிலையில், கேரளா சென்றதாக கூறப்பட்ட நடிகர் சென்னையிலேயே கைது செய்யப்பட்டார். அவரிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடக்கிறது. அவரும் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானால் கிருஷ்ணாவும் சிறையில் அடைக்கப்படுவார்.