ஜூன் 25, ஸ்ரீவில்லிபுத்தூர் (Virudhunagar News): விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்புக்கு அடுத்து மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் அமைந்துள்ளது கூமாப்பட்டி கிராமம். மலையடிவாரத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்திலேயே பிளவக்கல் அணை இருக்கிறது. பருவ காலங்களில் கூமாப்பட்டி அணையில் உள்ள நீரை பயன்படுத்தி சுற்றுவட்டார பகுதிகள் அனைத்தும் நல்ல விளைச்சலையும் காணும். சுற்றுலா மற்றும் கோடை வெயிலை தணிக்க பலரும் ஊட்டி, கொடைக்கானல், தேனி, பெங்களூர் போன்ற நகரங்களை நோக்கி படையெடுப்பார்கள். வானிலை: 4 நாட்களுக்கு தமிழகத்தில் அடித்துநொறுக்கப்போகும் கனமழை.. மக்களே குடையோடு போங்க.!
பிளவக்கல் அணை :
ஆனால் தமிழ்நாட்டிலேயே இயற்கை எழிலுடன் குக்கிராமமாக இருக்கும் கூமாப்பட்டி, மலையின் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளதால் இயற்கை காட்சிகள் கண்கொள்ளாத வகையில் இருக்கும். கூமாபட்டியில் உள்ள பிளவக்கல் அணை பிரபலமான உள்ளூர் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். சீசன் காலங்களில் பிளவக்கல் அணையில் தண்ணீர் நிறைந்தும் காணப்படும். இதனிடையே கூமாப்பட்டியின் அருமை, பெருமைகளை கூறி விடுமுறை காலத்தில் இங்கு வாருங்கள் என இளைஞர் ஒருவர் பதிவிட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மக்களின் எதிர்பார்ப்பை எகிறவைத்த கூமாப்பட்டி :
விடுமுறை காலமா?, மன அமைதி கிடைக்க வேண்டுமா?, ஊட்டி, கொடைக்கானல் என்று செல்லாமல் கூமாப்பட்டிக்கு கொஞ்சம் வாருங்கள் என்று இன்ஸ்டாகிராமில் இளைஞர் ஒருவர் வெளியிட்டு வரும் வீடியோ கவனத்தைப் பெற்றுள்ளது. தற்போது கூமாப்பட்டி என்ற விஷயம் மக்களின் பார்வையை அடைந்துள்ளது.
கூமாப்பட்டி குறித்து இளைஞர் வெளியிட்ட வீடியோ :
View this post on Instagram