Neeya Naana Street Dogs Debate (Photo Credit : FB)

செப்டம்பர் 01, சென்னை (Chennai News): இந்தியா முழுவதும் தெருநாய் தாக்குதல் என்பது அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களும் ஒரு சில நேரம் சாலையில் நடந்து செல்வோரை மூர்க்கத்தனமாக தாக்கிய சம்பவமும் நடந்துள்ளது. இதனால் பலரும் நாய் கடிபட்டு அவதிப்பட்டு உயிர் பிழைத்தாலும், ஒரு சில நேரம் ரேபிஸ் போன்ற வைரஸ் தொற்று கடுமையாக பாதிக்கப்பட்டு உயிரிழப்பும் நடக்கின்றன. இதனிடையே டெல்லி உச்சநீதிமன்றம் தெருநாய்களை பிடித்து அடைக்க வேண்டும் எனவும் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்து பின் ரத்து செய்தது. இதனால் இதுகுறித்து விவாதிக்க இந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியில் தெருநாய்கள் குறித்து பேசப்பட்டது. தமிழகத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சியாக இருக்கும் விஜய் தொலைக்காட்சி நீயா நானா என்ற விவாத நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக முன்னெடுத்து வருகிறது. Joy Crizildaa: மாதம்பட்டி ரங்கராஜின் லீலைகள்.. ஜாய் கிரிசில்டாவுடன் காதலை வளர்த்த வீடியோ லீக்.! 

தெரு நாயால் தனது குழந்தை உயிரிழந்ததாக கண்ணீர் மல்க தெரிவித்த தந்தை :

இந்த வாரத்துக்கான நீயா நானா நிகழ்ச்சியில் தெரு நாய்கள் இல்லாத நகரம் வேண்டும், தெரு நாய்களுக்கும் நகரத்தில் உரிமை உள்ளது என இருதரப்பு உரையாடல் தொகுப்பு வெளியிடப்பட்டிருந்தது. அப்போது நாய் காதலர்கள் என்ற பெயரில் ஒரு சிலர் முன்னெடுக்கும் மிகப்பெரிய ஆபத்தான கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி தமிழக அளவில் எதிர்ப்புகளை குவித்து பெரும் பேசு பொருளாக மாறியிருக்கிறது. ஒரு சிலர் தங்களது குழந்தை ரேபீஸ் தோற்று பாதிக்கப்பட்டு கண்முன் துடிதுடிக்க உயிரிழந்து விட்டதாக வருத்தத்துடன் தெரிவித்த நிலையில், நாய் காதலர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்ற பாணியில் அலட்சியமான பதிலை கூறினார்.

தெருநாய்கள் நகரத்திற்கு வேண்டுமா? - வெடித்த மோதல் :

நாய்களால் மட்டுமா விபத்து? குழந்தைகளாலும் தான் விபத்து.. தண்டிக்கலாமா? - பெண்மணி கேள்வி :

நாய்கள் குறுக்கே விழுந்து மட்டும் உயிர்கள் போவதில்லை. குழந்தைகள் சில நேரம் விழுந்து கூட நடக்கின்றன. நான் கூட இரண்டு முறை விழுந்து இருக்கிறேன். அதனால் குழந்தைகளை தண்டிக்கலாமா? என்ற பாணியில் கேள்வியை எழுப்பி இருந்தார். இந்த கேள்வியால் கடுமையான ஆத்திரமடைந்த தொகுப்பாளர் கோபிநாத் பெண்ணை கடுமையாக கண்டித்துக் கொண்டார். நாய் காதலர்கள் என்ற பெயரில் நாய் பிரியர்கள் செய்யும் வாக்குவாதத்துக்கு எதிராகவும் கடுமையான தனது வாதத்தை முன் வைத்திருந்தார். குறிப்பாக எத்தனை செல்வந்தர்கள் வசிக்கும் பகுதியில் செல்வந்தர்கள் நாய்க்கடிப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர். எந்த விஷயத்திலும் பாதிக்கப்படுவது அப்பாவி நடுத்தர மக்கள்தான். இதனை நீங்கள் ஏன் துளியும் நினைப்பதில்லை. நாய் மீது பேரன்புள்ளதாக கூறுகிறார்கள்.

பெண்மணியின் பதிலுக்கு கோபிநாத் எதிர்ப்பு :

விஜய் டிவி தொகுப்பாளர் கோபிநாத் சரமாரி கேள்வி :

ஆனால் ஒரு சக மனிதரின் மீது அன்பு உள்ளது போல ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. ஒவ்வொரு உயிரையும் நீங்கள் மதிக்க வேண்டும் என்றால் அனைத்து உயிர்களிடமிருந்து தான் அன்பு செலுத்த வேண்டும். நாய் மீது மட்டும் அலாதி பிரியம் ஏன்? எனவும் தனது கேள்வியை முன் வைத்திருந்தார். தெரு நாய்களை விட அதற்கு ஆதரவாக பேசும் நபர்கள் தான் மிகப்பெரிய ஆபத்தானவர்கள் என சமூக வலைதளங்களிலும் நாய் பிரியர்களுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் படவா கோபியும் இது தொடர்பான விமர்சனத்தை எதிர்கொண்டு இருக்கிறார். தமிழ்நாட்டில் மொத்தமாக 5 கோடிக்கும் அதிகமான நாய்கள் இருப்பதாக கூறப்படும் நிலையில், அதனை முறையாக பராமரிப்பது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகும்.

நடிகர் படவா கோபி கூறியதற்கு குவியும் கண்டனங்கள் :

நடிகர் படவா கோபி கோரிக்கை :

இந்த வார நீயா நானா? நிகழ்ச்சியால் சமூகவலைத்தளங்களில் மிகப்பெரிய விவாதம் உண்டாகியுள்ளது. இந்நிலையில் விஜய் டிவி நிர்வாகம் தனக்கு தொடர்பு கொண்டு நாய் விரும்பியாக, பொதுவான நபராக நீங்கள் நிகழ்ச்சிக்கு வந்து பேசினால் போதும் என்று கூறி நடிகர் படவா கோபியை வரவழைத்துள்ளது. பின் எடிட் செய்யப்பட்ட காட்சிகள் நிகழ்ச்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது எனவும், எடிட் செய்யப்படாத வீடியோவை வெளியிட வேண்டும் எனவும் நடிகர் படவா கோபி கோரிக்கை வைத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

விஜய் டிவிக்கு கோரிக்கை வைத்து வீடியோ :

 

View this post on Instagram

 

A post shared by Badava Gopi Actor (@badavagopi)

நாய் பிரியர்கள் உண்மையில் செய்ய வேண்டியது என்ன?

நாய்களை வீட்டில் வைத்து செல்லப்பிராணிகளாக வளர்ப்பவர்களுக்கு அதனை கட்டுப்படுத்தும் முறைகள் தெரிவதில்லை. அதே நேரத்தில் தெருநாய்களை மட்டும் எப்படி ஒரு வார்த்தையால் கட்டுப்படுத்தி விட முடியும்? ஏதோ ஒரு சூழ்நிலைக்காக பணிக்காக வெளியே செல்லும்போதும், குழந்தைகள் தெருவில் விளையாடும் போதும் போற போக்கில் நாய் வந்து கடித்துவிட்டு செல்வது யாராலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. ஒருவேளை நாய்கள் கட்டாயம் எங்களுடன் வேண்டும் என்ற பட்சத்தில் நாய் பிரியர்கள் அதனை தனியாக பண்ணை போன்ற இடங்களில் வைத்து வளர்க்கலாம். பண்ணை போன்ற நிலத்தில் அவர்கள் வளர்த்தால் மட்டுமே பல்வேறு புரிதல்கள் அவர்களுக்கும் ஏற்படும். தெருநாய்களை கட்டுப்படுத்த அரசும் முயற்சி எடுக்க வேண்டும். உணவுச்சங்கிலியின் படி பூமியில் ஒவ்வொரு உயிரும் வாழ தார்மீக உரிமை உண்டு. அதே நேரத்தில் அவைகளுக்கு ஏற்படும் இயற்கையான நோய் பாதிப்புகளை தடுக்க அரசு நிர்வாகம் தான் முயற்சி எடுக்க வேண்டும். எங்கும் அலட்சியம், எதிலும் அலட்சியம் தொடர்ந்தால் இதிலும் கட்டாயம் இழப்பு ஏற்படும்.