gold (Photo Credit: Pixabay)

ஜனவரி 23, புதுடெல்லி (New Delhi): உலகம் முழுவதும் உள்ள மக்களால் விரும்பப்படும் ஆபரணமாக இருக்கும் தங்கம், இந்திய மக்களால் அதிகம் விரும்பப்படுகிறது. இந்தியாவில் தங்கத்தின் விலை விண்ணைத்தொட்ட உச்சமாக இருந்து வருகிறது. 24 காரட் ஆபரண தங்கத்தின் விலை 10 கிராமுக்கு இன்று ரூ.80 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. இந்த தகவலை இந்திய புள்ளியான ஜூவல்லர்ஸ் அசோசியேசன் (India Bullion and Jewellers Association IBJA) தெரிவித்து இருக்கிறது. Mines Ministry: அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து: மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! 

24 காரட் ரூ.80 ஆயிரத்தை கடந்தது:

அமெரிக்காவில் அதிபராக பொறுப்பேற்ற டொனால்ட் ட்ரம்ப், பதவியேற்ற பின்னர் பல்வேறு நிர்வாக சீர்திருத்த நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறார். இதனால் முதலீட்டாளர்களிடம் இருந்து பெறப்படும் ஆர்வம், டாலர் மதிப்பிலான ரூபாய் வீழ்ச்சி ஆகியவை இந்தியாவில் தங்கத்தின் விலையை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது. இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.80,194 என்ற நிலையை அடைந்துள்ளது.

அக்.2024 க்கு பின் புதிய உச்சக்கட்டம்:

வர்த்தக ஸ்திரத்தன்மையின்மை, டாலர் ஏற்ற-இரக்கம் உட்பட பல்வேறு காரணிகள் தங்கத்தின் விலையை உயர்த்த முக்கிய காரணியாக அமைந்துள்ளது என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கும் அதே வேளையில், 2025 நடுப்பகுதியில் தங்கத்தின் விலை தீர்மானத்தை எட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த அக்.30, 2024 அன்று தங்கத்தின் விலை ரூ.79681 என்ற நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.