Ministery of Coal and Mines & Ambalakarars with Union Minister Kishan Reddy (Photo Credit: @MinesMinIndia / @annamalai_k X)

ஜனவரி 22, புதுடெல்லி (New Delhi): மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர், அரிட்டாபட்டி, வெள்ளாளப்பட்டி உட்பட 40 க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைந்து, 4984 ஏக்கர் பரப்பில் டங்ஸ்டன் எடுக்கும் சுரங்கத்திற்கு அனுமதி வழங்கி, மத்திய அரசு அது தொடர்பான ஏல அறிவிப்பை சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது. இந்த விசயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மேலூர் மக்கள், மதுரை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தி இருந்தனர். அதனைத்தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சிகள் மக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் களமிறங்கியது.

மக்கள் எதிர்ப்பு:

முல்லை பெரியாறு அணையில் 1 போகம் பாசனத்தை பெறும் பகுதிகளும், டங்ஸ்டன் சுரங்கத்திற்குள் இடம்பெற்று இருந்தது. மேலும், சமண குகைகள், புராதன சின்னங்கள் கொண்ட இடங்கள், பல்லுயிர் பெருக்கத்திற்கு காரணமாக அமைந்த மலைகள் என டங்ஸ்டன் சுரங்கம் அமைந்தால் மேற்கூறிய அனைத்தும் பாழாகிவிடும் என மக்கள் தீவிர போராட்டத்தையும் முன்னெடுத்தனர். தமிழர்ளின் திருநாளாக கருதப்படும் தைப்பொங்கல் பண்டிகையும், மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் டங்ஸ்டன் எதிர்ப்புடன் தொடர்ந்தது. Rahul Gandhi: தமிழ்நாட்டில் தொடங்கிய இரும்பின் காலம் - ராகுல் காந்தி பெருமிதம்.! 

மத்திய அமைச்சருடன் நேரில் சந்திப்பு:

இதனையடுத்து, இவ்விவகாரத்தை கவனித்த தமிழ்நாடு அரசு, சட்டப்பேரவையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அரிட்டாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்களை நேரில் சந்தித்து, அவர்களில் முக்கியஸ்தர்களை டெல்லிக்கு அழைத்துச் சென்று மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை நேரில் சந்தித்து கோரிக்கையை வைத்திருந்தார். இன்று நல்ல செய்தி கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

ஏலம் ரத்து அறிவிப்பு:

இந்நிலையில், மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பான சுரங்க ஏலத்தை ரத்து செய்து உத்தரவிட்டு இருக்கிறது. பல்லுயிர் பெருக்கம் என்ற நிலையின் பேரில், சுற்றுப்புற சூழலியல் மற்றும் புராதன சின்னங்கள் அழியாமல் பாதுகாக்கும் பொருட்டு, டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்தத்தை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அறிவிப்பு பின்வருமாறு: Mines Ministry Decides to Annul the Auction of Nayakkarpatti Tungsten Mineral Block https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2095480