Soldiers killed in Anantnag Attack (Photo Credit: Twitter)

செப்டம்பர் 15, அனந்த் நாக் (Jammu and Kashmir News): கடந்த புதன்கிழமை ஜம்மு காஷ்மீரில் அனந்த் நாக் (Anantnag) மாவட்டத்தின் கோகேர்னாக் (Kokernag) பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளதாக தகவல்கள் வெளியானது. தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டனர்.

ராணுவ அதிகாரிகளும், போலீசாரும் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு மேற்கொண்டனர். MS Dhoni Helps: இளம் கிரிக்கெட்டருக்கு லிப்ட் கொடுத்து உதவிய தோனி; கலக்கல் வீடியோ வைரல்.. நெகிழ்ந்துபோன இளைஞர்..!

பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு கர்னல் மன்ப்ரீத் பிரீத் சிங் (Colonel Manpreet Singh), மேஜர் ஆஷிஷ் (Major Ashish Dhonchack) மற்றும் காஷ்மீர் டிஎஸ்பி ஹுமாயுன் பட் (Deputy Superintendent Humayun Bhat) ஆகிய மூவரும் பலியாகினர். கர்னல் மன்ப்ரீத் சிங்க் ரைஃபில்ஸ் படை பிரிவின் கமாண்டிங் அதிகாரி ஆவார்.

ஸ்ரீ நகரில் (Srinagar) மூவரின் உடலுக்கும் ராணுவத்தினர் அஞ்சலி செலுத்தினர்.  கர்னல் மன்ப்ரீத் மற்றும் மேஜர் ஆஷிஷ்- ன் உடல்கள் பானிபட்டுக்கு (Panipat) கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராணுவ வீரர் ஒருவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.