Knife (Photo Credit: Pixabay)

மே 14, ஹூப்ளி (Karnataka News): கர்நாடக மாநிலம், ஹூப்ளியில் (Hubli) உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்த, 15 வயது மாணவரும், இவரது எதிர்வீட்டில் வசிக்கும், 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவரும் நண்பர்கள் ஆவர். இவர்கள் இருவரும், தினமும் சேர்ந்து விளையாடுவது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் (மே 12) இரவு இவர்கள் இருவரும், வேறு சில நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, ஏதோ ஒரு காரணத்தால், 9ஆம் வகுப்பு மாணவனுக்கும், சிறுவனுக்கும் சண்டை வந்து இவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. Justice BR Gavai: உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் பதவியேற்பு..!

மாணவர் கத்தியால் குத்திக்கொலை:

இதில் கோபமடைந்த சிறுவன், தன் வீட்டுக்கு சென்று கத்தியை எடுத்து வந்து, 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவரின் வயிற்றில் (Murder) குத்தியுள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் விழுந்த மாணவரை, அருகில் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, தகவல் அறிந்த வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.