Operation Sindoor: பஞ்சாப்பில் ஏவுகணை வீசி தாக்குதல்.. எல்லையில் அதிகரிக்கும் போர் பதற்றம்.., பாகிஸ்தான் அத்துமீறல்..!

பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவம் இன்று காலை ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தியதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

Operation Sindoor: பஞ்சாப்பில் ஏவுகணை வீசி தாக்குதல்.. எல்லையில் அதிகரிக்கும் போர் பதற்றம்.., பாகிஸ்தான் அத்துமீறல்..!
Missile Attack in Punjab (Photo Credit: @ANI X)

மே 08, அமிர்தசரஸ் (Punjab News): ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இச்சம்பத்துக்கு பதிலடி தரும் வகையில், இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டது. இதில், 9 பயங்கரவாத முகாம்கள் அளிக்கப்பட்டு, 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 'வெற்றிதான் எங்கள் பயிற்சியே.. எங்கும் எப்போதும் தயார்' - எதிரிகளுக்கு பிரகடனம் செய்த இந்திய இராணுவம்..!

ஏவுகணை வீசி தாக்குதல்:

இதனையடுத்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநில எல்லைகளில் இருநாட்டு ராணுவங்கள் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசில் பாகிஸ்தான் ராணுவம் இன்று (மே 08) ஏவுகணையை (Missile Attack) வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதுகுறித்து, தகவலறிந்த ராணுவ அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். இதில், பி15இ என்ற சீன தயாரிப்பு ஏவுகணை தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்தது. இந்த ஏவுகணை பாகிஸ்தான் பகுதியில் இருந்து, இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் வந்து விழுந்துள்ளது. ஏவுகணையை இந்திய ரேடார் கருவிகள் கண்காணித்து அதனை இடைமறித்து தாக்கி அழித்துள்ளது.

ட்ரோன் தாக்குதல்:

பஞ்சாப் மாநிலம், லாகூரில் இன்று (மே 08) காலை ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தான் ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதனால், அப்பகுதியில் பெரும் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏதும் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தால், இந்தியா-பாகிஸ்தான் எல்லைகளில் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

வீடியோ இதோ:

(The above story first appeared on LatestLY on May 08, 2025 01:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).