Schoolgirl Commit Suicide: காதல் தொல்லையால் 16 வயது சிறுமி தற்கொலை; ஒருதலை காதலால் விஷம் குடித்து விபரீதம்.!
பெங்களூரில் பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், இறப்பிற்கு காரணமான வாலிபரை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
ஏப்ரல் 17, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள கொப்பல் நகர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி பள்ளியில் படித்து வந்துள்ளார். அந்த பகுதியை சேர்ந்த புருஷோத்தம் என்ற நபர், சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்துள்ள நிலையில் தனது காதலை பலமுறை கூறியும் சிறுமி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், தொடர்ந்து இவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டும் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் சிறுமி மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார். Girlfriend Murder: மதுபோதையில் காதலர்கள் இடையே தகராறு; காதலியை சுவற்றில் மோதி கொலை..! – காதலன் வெறிச்செயல்..!
இந்நிலையில் சம்பவ தினத்தன்று வீட்டில் சிறுமி தனியாக இருந்துள்ளார். மனமுடைந்து காணப்பட்ட சிறுமி திடீரென விஷத்தை குடித்து (Drinking Poison), தற்கொலை செய்துகொண்டார். சிறிது நேரத்தில் சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். பின்னர், வீட்டிற்கு வந்த அவரது பெற்றோர், தனது மகள் வாயில் நுரை தள்ளியபடி இறந்துகிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுது புலம்பியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பேவூரு காவல்துறையினர், சிறுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சிறுமியின் இறப்பிற்கு காரணமான அந்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுமியின் உறவினர்கள் அனைவரும் பேவூர் காவல்நிலைய வாசலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சற்று நேரம் அங்கு பரபரப்பு நிலவியது. இதனையடுத்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on Apr 17, 2024 12:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

