கணவர் கழுத்து நெரித்து கொடூரக் கொலை.. மனைவி, மகள் கைது..!

உத்தர பிரதேசத்தில் குடும்ப தகராறு காரணமாக கணவரை கொலை (Husband Murder) செய்த வழக்கில், மனைவி மற்றும் மகள் கைது செய்யப்பட்டனர்.

கணவர் கழுத்து நெரித்து கொடூரக் கொலை.. மனைவி, மகள் கைது..!
UP Husband Murder Case (Photo Credit: @TrueStoryUP X)

ஆகஸ்ட் 22, லக்னோ (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி ராஜேஷ் (வயது 45) - காமினி (வயது 40). இத்தம்பதிக்கு காஜல் என்ற மகள் உள்ளார். தம்பதி இருவருக்கும் இடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தனது மனைவி காமினிக்கு வேறொருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகித்து சண்டை போட்டுள்ளதாக கூறப்படுகிறது. சம்பவ நாளன்று இரவு, காமினி தனது கணவரை கழுத்தை நெரித்து கொலை (Murder) செய்துள்ளார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். திருமணமாகி 5 மாதங்களே ஆன இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!

கணவர் கழுத்து நெரித்து கொலை:

இதனையடுத்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, ராஜேஷ் குடித்துவிட்டு மதுபோதையில் படிக்கட்டிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறியுள்ளனர். ஆனால், ராஜேஷின் உடல் மற்றும் கழுத்தில் இருந்த அடையாளங்களை கண்டு காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதன்பின்னர், காமினியையும் அவரது மகள் காஜலையும் கைது செய்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், காமினி வேறொருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். அதை தனது கணவர் எதிர்த்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

மனைவி, மகள் கைது:

இதனிடையே, ராஜேஷின் தாய் மாமா சந்தோஷ் பாபு அளித்த புகாரின்பேரில், தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், ராஜேஷ் தனது மனைவியின் கள்ளத்தொடர்பு குறித்து சந்தேகித்து வந்துள்ளார். மேலும், மாமாவின் பெயரில் இருந்த 5 பெரிய நிலங்களை விற்று, பணத்தை தன்னிடம் தருமாறு காமினி தனது கணவர் ராஜேஷை வற்புறுத்தி வந்ததாக தெரிவித்தார். இதனால் தான் காமினி தனது கணவரை திட்டமிட்டு கொலை செய்துள்ளார் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, பிரேத பரிசோதனை முடிவில், ராஜேஷ் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டது உறுதியானது. அவரது தாய் மாமா சந்தோஷ் பாபு அளித்த புகாரின்பேரில், மனைவி காமினி மற்றும் மகள் காஜல் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Aug 22, 2025 07:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).