டிசம்பர் 29, நெல்லூர்: அரசியல் கட்சியின் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு (7 Died Political Party ) இறுதியில் கூட்டநெரிசல் ஏற்பட்டதால் 7 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள நெல்லூர், கந்தகூரில் (Nellore, AndraPradesh) தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டமானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தெலுங்கு தேசம் கட்சியினர் பலரும் திரளாக வந்து கலந்துகொண்டனர்.
பொதுக்கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில், அம்மாநில எதிர்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவும் (N. Chandrababu Naidu) கலந்துகொண்டு உரையாற்றினார். அவரின் உரை நிறைவுபெற்றதும், மக்கள் அங்கிருந்,து விரைந்து வீட்டிற்கு செல்ல முற்பட்டனர். Love Killed: முகநூல் பேக் ஐடியில் வேவு பார்த்த காதலன்.. போலி காதலில் விழுந்த சிறுமி கழுத்தறுத்து கொலை.. பெற்றோர் கண்முன் பயங்கரம்.!
அனைவரும் ஒரே நேரத்தில் அங்கிருந்து புறப்பட்ட காரணத்தால் தள்ளுமுள்ளு, கூட்டநெரிசலில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். காவல் துறையினர் விரைந்து செயல்பட்டு அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், காயமடைந்த 5 பேரை மீட்டு சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்து சென்ற சந்திரபாபு நாயுடு, பலியானோரின் உறவினர்களிடம் ஆறுதல் தெரிவித்து தலா ரூ.10 இலட்சம் நிதிஉதவி, குழந்தைகளின் படிப்பு செலவுகளை தான் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்து இருக்கிறார்.
கடந்த சில மாதங்களாகவே சந்திரபாபு நாயுடு ஆளும்கட்சிக்கு எதிராக முழுநேர அரசியலில் தீவிரமாக களமிறங்கி செய்யப்பட்டு வரும் நிலையில், அவரின் பொதுக்கூட்டத்தில் 7 பேர் பலியாகிள்ள சோகம் நடந்துள்ளது.