
ஜனவரி 22, புதுடெல்லி (New Delhi): மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூரை அடுத்த அரிட்டாபட்டி (Arittapatti), வல்லாளப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை இணைந்து, டங்ஸ்டன் சுரங்கம் (Tungsten Mining Madurai) அமைக்க ஏற்பாடுகள் நடந்தன. இந்த விசயத்திற்கு மேலூர் (Melur) மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வீதியில் இறங்கி போராடி, அது மக்கள் போராட்டமாக உருவெடுத்தது. மாநில அரசு டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மத்திய அரசின் மீது பதில் சொல்ல, மத்தியில் ஆளும் பாஜக (BJP) அரசு மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு, மாநில பாஜக சார்பில் பதில் வழங்கப்பட்டது. மேலும், டங்க்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக கூறப்பட்டது.
விவசாயிகளுடன் அண்ணாமலை (BJP Annamalai) டெல்லி பயணம்:
இதனிடையே, தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையிலான மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி, வல்லாளப்பட்டி மற்றும் நாயக்கர்பட்டி அதனை சுற்றியுள்ள கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளை திரட்டி, டெல்லியில் உள்ள மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை நேரில் சந்தித்து மனு அளித்தார். டங்ஸ்டன் சுரங்கம் வேண்டாம் என கிராம மக்கள் கோரிக்கை வைத்த மனுக்களுடன் அண்ணாமலை டெல்லி பயணித்து இருந்த நிலையில், அவர் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். Kathir Anand: 5 மணிநேரத்தை கடந்து தொடரும் விசாரணை; அமலாக்கத்துறை அலுவலகத்தில் திமுக எம்.பி கதிர் ஆனந்த் நேரில் ஆஜர்..!
நாளை மக்கள் மகிழ்ச்சிக்குள்ளாகும் அறிவிப்பு:
அப்போது அவர் கூறுகையில், "பாஜக மக்களுக்கு கொடுத்த உறுதிமொழியை காப்பாற்றி இருக்கிறது. 4981 ஏக்கர் நிலத்தில் சுரங்கம் வராது. நாளை மத்திய அரசின் சார்பில் செய்திக்குறிப்பு அதிகாரபூர்வமாக வரும். இந்தியாவில் சிமெண்ட், கல் என பல விஷயங்களுக்கு சுரங்கம் உள்ளது. அரிட்டாபட்டி பகுதியில் 20 ஆயிரம் மக்களும் பல கிராமங்களும் உள்ளன. அங்கு பல புராதன சின்னங்கள் இருக்கின்றன. எந்த சுரங்கத்திலும் மத்திய அரசுக்கு வருமானம் வராது. பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கிறார். அது மீத்தேனில் தொடங்கி தற்போது வரை நிலைத்து நிற்கிறது. அரிட்டாபட்டி மக்கள் மகிழ்ச்சியடையும் வகையிலான அறிவிப்பு நாளை கட்டாயம் வெளியாகும். டங்ஸ்டன் சுரங்கம் வராது என்ற பாஜகவின் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரதமரை சந்தித்து பின் அறிவிப்பு:
மத்திய அரசை பொறுத்தவரையில் சுரங்கத்திற்கு அரிட்டாபட்டி, வெள்ளாளப்பட்டி பகுதியில் தமிழ்நாடு அரசு அளித்த தகவலின் பேரில் மத்திய அரசு அதற்கான நடவடிக்கை எடுத்தது. இதனால் மத்திய அமைச்சர் பிரதமரை நேரில் சந்தித்து நாளை அறிவிப்பை வெளியிடுவார். தமிழ்நாட்டில் மேலூர் அரிட்டாபட்டியில் மட்டுமே டங்ஸ்டன் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது" என பேசினார். அண்ணாமலையின் பேச்சு வாயிலாக நாளை மத்திய அமைச்சர் அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம் ரத்து செய்யப்படும் அறிவிப்பை பிரதமரிடம் அனுமதி பெற்றுக்கொண்டு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.