ஆகஸ்ட் 03, உத்தரப் பிரதேசம் (Uttar Pradesh News): நேபாளம் போஹாராவை சேர்ந்த இளம்பெண் சுஷ்மிதா சரு மஹர். இவர் உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி மாவட்டம் பரடரியில் உள்ள வீட்டில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டின் மொட்டை மாடிக்கு சென்ற இளம்பெண் செல்போனில் வந்த அழைப்பில் பேசிக்கொண்டிருந்த நிலையில், அப்பகுதியை சேர்ந்தவர்கள் திருட வந்த பெண் என நினைத்து அவரை பிடிக்க முற்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து சுஷ்மிதாவை மிரட்டியதால் அவர் பயத்தில் மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்தார். Granite Quarry Collapse: பாறைகள் சரிந்து 6 தொழிலாளர்கள் பலி.. கிரானைட் குவாரியில் பயங்கரம்.!
பெண்ணை மின் கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய கும்பல் :
இதில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்ட நிலையில், அவரை மின்கம்பத்தில் கட்டி வைத்த கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது. இளம்பெண் தான் இங்கு திருட வரவில்லை. வாடகைக்கு வசிப்பதாக கூறியும் அந்த கும்பல் சமாதானமாகாது தொடர்ந்து தாக்கியதால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுஷ்மிதாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இளம்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரை தாக்கிய 4 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவாகியவர்களையும் தேடி வருகின்றனர். இதனிடையே இளம்பெண்ணை கும்பல் சரமாரியாக தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளம்பெண்ணை கும்பல் தாக்கியது குறித்த வீடியோ :
🚨 ब्रेकिंग न्यूज़ | बरेली में दरिंदगी की हद पार
😡 भीड़ ने युवती को चोर समझ बेरहमी से पीटा!
📍 नोएडा से बरेली काम के सिलसिले में आई नेपाल मूल की युवती
🙏 हाथ जोड़ती रही, चीखती रही
"मैं चोर नहीं हूं"
📹 फिर भी भीड़ ने की बेरहमी से पिटाई और की अभद्रता
🏃♀️ जान बचाने को युवती ने… pic.twitter.com/jz0D5R0rhW
— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) August 2, 2025