மணப்பெண் மயங்கி விழுந்து பலி.. நிச்சயதார்த்த விழாவில் நடனமாடியபோது நேர்ந்த சோகம்..!

உத்தர பிரதேசத்தில் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் நடனமாடிக் கொண்டிருந்த மணப்பெண், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மணப்பெண் மயங்கி விழுந்து பலி.. நிச்சயதார்த்த விழாவில் நடனமாடியபோது நேர்ந்த சோகம்..!
Bride Dies in Engagement Party (Photo Credit: @HindiKhabar X)

மே 06, பதாயூன் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், பதாயூன் (Budaun) மாவட்டத்தில் நூர்பூர் பினானு கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் தீக்ஷா (வயது 22). இவருக்கும், மொராதாபாத் மாவட்டம், ஷிவ்புரி கிராமத்தை சேர்ந்த சவுரப் என்ற வாலிபருக்கும் நேற்று திருமணம் நடைபெறவிருந்தது. இந்நிலையில், திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நேற்று முன்தினம் (மே 04) இரவு நடைபெற்றது. நிகழ்வில் மகிழ்ச்சியாக மணப்பெண் தீக்ஷா தனது சகோதரிகளுடன் நடனமாடி கொண்டிருந்தார். சாலை விபத்தில் காயமடைந்தால் சிகிச்சை இலவசம்.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!

மணப்பெண் பலி:

அப்போது, திடீரென தீக்ஷாவுக்கு நெஞ்சு வலி (Heart Attack) ஏற்பட்டதில், நடன மேடையில் இருந்து தனது அறையில் ஓய்வெடுக்க செல்வதாக கூறிவிட்டு சென்றார். அறைக்கு சென்ற தீக்ஷா நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், அறை கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, தீக்ஷா மயங்கி விழுந்து உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ இதோ:

(The above story first appeared on LatestLY on May 06, 2025 06:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).