Gas Cylinder (Photo Credit: @ANI X)

ஜூன் 08, புதுடெல்லி (New Delhi News): சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க பயோமெட்ரிக் முறை கட்டாயம் என மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி நுகர்வோர் தனது ஆதார் எண்ணை சரிபார்க்கவும், மோசடியை தடுக்கும் விதமாகவும் இத்திட்டம் கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இதனால் சிலிண்டரை பெறும் வாடிக்கையாளர்கள் தனது ஆதாரை கேஸ் ஏஜென்சியில் பதிவு செய்து வருகின்றனர்.

பயோமெட்ரிக் கட்டாயம் :

இந்த விஷயம் குறித்த உரிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், சிலிண்டர் ஊழியர்கள் வீடு, வீடாகவும் சென்று இது குறித்து அறிவுறுத்தி வருகின்றனர். இதனிடையே கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் தங்களது பயோமெட்ரிக் தகவல்களை வழங்காவிட்டால் சிலிண்டர் நிறுத்தப்படும் என செய்திகள் வெளியானதால் பலரும் கேஸ் நிறுவனங்களுக்கு சென்று வருகின்றனர். 8 Year Old Boy Dies: ரூ.20 பணத்துக்காக 8 வயது சிறுவன் துடிதுடித்து உயிரிழப்பு.. நெஞ்சை உலுக்கும் காட்சிகள்.! 

மத்திய அரசின் முடிவு :

இது தொடர்பாக கேஸ் ஏஜென்சிகள் முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் இதுவரை பதிவு செய்யாதவர்கள் கேஸ் நிறுவனத்திற்கு நேரில் சென்று புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும், ஆதார் கார்டு மூலமாக பதிவு செய்யப்பட்ட பின்னர் கருவிழி போட்டோ எடுக்கப்பட்டு பதிவு செய்யப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக சமையல் எரிவாயு மானியங்கள் தகுதி இல்லாத நபர்களுக்கு செல்வதை தடுக்க மத்திய அரசு இம்முடிவை எடுத்துள்ளது.