Woloo Powder Room (Photo Credit: @Central_Railway X)

டிசம்பர் 23, மும்பை (Mumbai): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, முலுண்ட் (Mulund Woloo Powder Room) இரயில் நிலையத்தில், மத்திய இரயில்வேயின் சார்பாக உலகத்தரம் வாய்ந்த பெண்கள் சிறப்பு கழிவறையானது அமைக்கப்பட்டுள்ளது. இது நவீன கழிப்பிடமாக மட்டுமல்லாது, அழகு சாதன பொருட்கள், காத்திருப்பு அறை, தாய்மார்கள் பாலூட்டும் வரை என பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டதாகும்.

இரயில் நிலைய பொதுக்கழிவறைகள்: மகாராஷ்டிரா மாநிலத்தை பொறுத்தமட்டில், மும்பை இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றாக இருக்கிறது. அங்கு நாளொன்றுக்கு லட்சக்கணக்கான பயணிகள் இரயில் போக்குவரத்தை உபயோகம் செய்து வருகின்றனர். இவர்களின் பயணத்தின் போது கட்டாயம் ஒரு முறையேனும் பொது கழிப்பறைகளை உபயோகம் செய்ய வேண்டி இருக்கும். அவ்வாறான கழிப்பறைகள் பெரும்பாலும் சரிவர பராமரித்தாலும், ஏதோ ஒரு குறை என்பது இருந்து கொண்டே இருக்கும். Budget Smartphone Oppo: பட்ஜெட் பத்மநாபங்களுக்கு ஏற்ற அட்டகாசமான ஸ்மார்ட்போன்: ஓப்போ ஏ59 5ஜி சிறப்பம்சங்கள் என்ன?. விபரம் இதோ.! 

முற்றிலும் நவீனமயம்: இந்நிலையில், அதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு மத்திய இரயில்வே மேற்கொண்ட முன்மாதிரி முயற்சியானது தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. முலுண்ட் இரயில் நிலையத்தில் முதற்கட்டமாக சோதனை முயற்சியில் அமைக்கப்பட்ட நவீன கட்டண கழிப்பிடத்திற்கு உலு பவுடர் ரூம் (Woloo Powder Room) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த அறையை பெண்கள் நாள் ஒன்றுக்கு செயலி வழியாக ரூபாய் ஒன்றுக்கு முன்பதிவு செய்து பயன்படுத்தலாம்.

Woloo Powder Room (Photo Credit: @Central_Railway X)

சலுகை கட்டணம்: அதேபோல, முன்பதிவு செய்யாத பெண்களுக்கு ரூபாய் பத்து மதிப்பீட்டில் இதில் உள்ள அனைத்து நவீன வசதிகளை உபயோகம் செய்யலாம். ஆண்டு சந்தா வாயிலாக ரூபாய் 365 கட்டணம் செலுத்தியும் உலு பவுடர் ரூமை உபயோகம் செய்யலாம். முற்றிலும் குளிர்சாதன வசதி ஏற்படுத்தப்பட்ட கழிப்பறையாகவும் உலு அமைக்கப்பட்டுள்ளது. Pornhub try To Resolve Sex Trafficking: சிறார்களுக்கு எதிரான மற்றும் கட்டாயப்படுத்திய பாலியல் உறவு வீடியோ குற்றவாளிகளை கைது செய்ய உதவும் போர்ன் ஹப்: அதிரடி அறிவிப்பு.! 

கழிவறை உபயோகம் மட்டுமல்லாது ஷாப்பிங் உட்பட பிற வசதிகள்: அங்கு பெண்களுக்கு தேவைப்படும் சானிட்டரி நாப்கின், அழகு சார்ந்த பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளது. இவற்றை விரும்பும் பயணிகள் வாங்கிக்கொள்ளலாம். மத்திய இரயில்வேயின் சார்பில் அனைவரும் அங்கும் வகையில் விஐபி சேவை உலு பவுடர் ரூமில் கிடைக்கும்.

வரவேற்பு கிடைத்தால் மாற்றம் நிச்சயம்: வெளிநாடுகளின் சுகாதார முறைக்கு சவால் விடும் வகையில் முதற்கட்டமாக மத்திய ரயில்வே மேற்கொண்டுள்ள இந்த முயற்சி மூலமாக ஆண்டுக்கு ரூபாய் 38 லட்சம் வருமானம் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சோதனை முயற்சியாக முதலில் முலுண்ட் இரயில் நிலையத்தில் உலு பவுடர் ரூம் அமைக்கப்பட்டதை தொடர்ந்து, மும்பை பிரிவு, எல்டிடி, காட்கோபர், தானே, கஞ்சூர்மார்க் மற்றும் செம்பூர் ஆகிய இரயில் நிலையங்களில் அடுத்தபடியாக இந்த திட்டத்தை செயல்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

விரைவில் இந்த திட்டம் மத்திய இரயில்வேக்கு உட்பட்ட பல்வேறு இரயில் நிலையங்களிலும் மக்கள் அணுகும் வகையில் அமைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.