பேசுவதை நிறுத்தியதால் ஆத்திரம்.. சக மாணவர் வெறிச்செயல்.., விசாரணையில் வெளிவந்த உண்மை..!

மத்திய பிரதேசத்தில் 12ஆம் வகுப்பு மாணவியை சக மாணவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேசுவதை நிறுத்தியதால் ஆத்திரம்.. சக மாணவர் வெறிச்செயல்.., விசாரணையில் வெளிவந்த உண்மை..!
Crime Scene File Pic (Photo Credit: Pixabay)

மே 05, தார் (Madhya Pradesh News): மத்திய பிரதேச மாநிலம், தார் (Dhar) மாவட்டத்தில் உள்ள விவசாய நிலத்தில், நேற்று முன்தினம் (மே 03) சிறுமி ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், உமர்பன் காவல்நிலையத்தின் எல்லைக்குட்பட்ட விவசாய நிலத்தில், சிறுமியின் உடல் கண்டுக்கப்பட்டது. உடனடியாக, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டனர்.  Trending Video: பெண்ணின் உயிரை காப்பாற்றிய இளைஞர்.. மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள்.!

சிறுமி கொலை:

இதுகுறித்து மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த 17 வயது சிறுமி, 12ஆம் வகுப்பு படித்து வந்தது தெரியவந்தது. இதன் அடுத்தக்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில், சக மாணவன், உயிரிழந்த சிறுமியை தொந்தரவு செய்து வந்ததாக தகவல் கிடைத்தது. இதன்பேரில், அந்த சிறுவனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். தீவிர விசாரணையில், சிறுமியை கொலை (Murder) செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.

விசாரணையில் அதிர்ச்சி:

மேலும், சிறுமி தன்னுடன் பேசுவதை நிறுத்தி விட்டதாகவும், இதனால் தான் மிகுந்த மன வருத்தமடைந்ததாகவும் அவர் தெரிவித்தார். அந்த சிறுவன் கடந்த மே 02ஆம் தேதி இரவு தன்னை சந்திக்க வருமாறு சிறுமியிடம் கூறியிருக்கிறார். அதன்படி, சிறுமி அந்த விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் கூர்மையான ஆயுதத்தால் அந்த சிறுமியை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on May 05, 2025 11:37 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).