ஜூன் 01, மும்பை (Sports News): நடப்பு 2023 ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணி வெற்றி அடைந்து கோப்பையை கைப்பற்றியது. மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni) தலைமையிலான சென்னை அணி ஐ.பி.எல் கோப்பையை பெற்றதை தொடர்ந்து, ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்தனர்.
போட்டியின் போதே தோனிக்கு முட்டியில் காயம் ஏற்பட்டதாக தெரியவருகிறது. அதற்காக அவர் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதியானார். மருத்துவ சிகிச்சையின் போது பகவத்கீதையை படிக்கவும் அவர் எடுத்து சென்றதாக புகைப்படங்கள் வெளியாகின. Team India Jersey: டெஸ்ட், ODI மற்றும் டி20-க்கான இந்திய கிரிக்கெட் அணியின் டி-சர்ட் வெளியீடு..!
இந்த நிலையில், தோனிக்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், மூட்டு பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்தனர். இதனையடுத்து, இன்று காலை அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில், அது வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது என மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.