ஆகஸ்ட் 07, மேற்கிந்திய தீவுகள் (Cricket News): மேற்கிந்திய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் (India Vs West Indies) மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஒருநாள், டெஸ்ட் உட்பட 10 போட்டிகளில் விளையாடுகிறது. இந்திய - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான பலபரீட்சையில் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி அடைந்ததது.
5 போட்டிகள் கொண்ட T20I ஆட்டம் தற்போது நடைபெறும் நிலையில், தொடர்ச்சியாக 2 ஆட்டத்தில் இந்திய அணி எதிர்பாராத தோல்வியை சந்தித்துள்ளது. இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Causes of Skin Wrinkles: அச்சச்சோ.. இந்த வகை உணவுகளை அதிகம் சாப்பிடுறீங்களா?; விரைவில் முதுமை, தோல் சுருக்கம் ஏற்படுமாம்..!
கடந்த 12 ஆண்டுகளில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான T20I ஆட்டத்தில் இந்திய அணி தொடர்ச்சியாக 2 தோல்வியை சந்திப்பது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் 3 ஆட்டங்கள் பாக்கி இருக்கும் நிலையில், அவை மூன்றிலும் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய கிரிக்கெட் அணி இருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் சார்பில் இஷான் கிஷன், சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார் ஆகியோர் விளையாடுகின்றனர். ஹர்திக் பாண்டியா அணியை வழிநடத்துகிறார்.