Atishi Marlena (Photo Credit: @RitamAppKannada X)

பிப்ரவரி 08, புதுடெல்லி (New Delhi News): இந்தியாவின் மிகச்சிறிய மாநிலங்களில் ஒன்றாகவும், இந்திய தலைநகரை கொண்ட மாநிலமாகவும் இருப்பது டெல்லி (Delhi). டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் 2025 (Delhi Assembly Elections 2025 Results) வாக்குப்பதிவு, கடந்த 05 பிப்ரவரி 2025 நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, 08 பிப்ரவரி 2025 இன்று டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2025 வெளியாகிறது. இன்று காலை முதலே வாக்குகள் எண்ணப்பட்டு தொடர்ந்து தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. டெல்லியில் கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு பின் பாஜக ஆட்சி அமைகிறது. காங்கிரஸ் கடந்த 3 தேர்தலாக ஒரு தொகுதியில் கூட டெல்லி மாநிலத்தில் வெற்றிபெறாமல் தோல்வி அடைந்துள்ளது. பாஜக 47 தொகுதியிலும் ஆம் ஆத்மி 23 தொகுதியிலும் முன்னிலையில் இருக்கிறது. Arvind Kejriwal: ஆம் ஆத்மி கட்சியினருக்கு பேரிடி.. மெயின் தலையே போச்சு.. அரவிந்த் கெஜ்ரிவால் படுதோல்வி.! 

அதிஷி மர்லேனா வெற்றி (Atishi Marlena Victory):

இந்நிலையில், டெல்லி கல்காஜி (Kalkaji Constituency) தொகுதியில் களமிறங்கி இருந்த அதிஷி, இறுதி 3 சுற்றுகளில் கணிசமான வாக்குகளை பெற்று இருக்கிறார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதூரியை விட கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றி அடைந்துள்ளார். அதிஷியின் வெற்றி ஆம் ஆத்மி கட்சியினருக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் இருக்கிறது. கல்காஜி தொகுதியில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், இறுதியில் அதிஷி வெற்றி அடைந்துள்ளார். ஆட்சி அதிகாரத்தை பாஜகவிடம் ஆம் ஆத்மி கொடுத்திருந்தாலும், அதிஷியின் வெற்றி ஆம் ஆத்மி கட்சியினருக்கு ஆறுதலை தரும் வகையில் அமைந்து இருக்கிறது. Delhi Assembly Election Results 2025: டெல்லியை கைப்பற்றுவது யார்? திடீர் முன்னிலை பெற்ற ஆம் ஆத்மி.. வலுக்கும் போட்டி.! 

அதிஷி மர்லேனா பெற்ற வாக்குகள்: 41530

ரமேஷ் பிதூரி பெற்ற வாக்குகள்: 40541

வித்தியாசம்: 3377