
பிப்ரவரி 09, டெல்லி (New Delhi News): டெல்லி மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல் 2025ல், கடந்த 1993ம் ஆண்டுக்கு பின்னர், பாரதிய ஜனதா கட்சி வெற்றி அடைந்துள்ளது. அம்மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளில் 48 தொகுதியில் பாஜக வெற்றி அடைந்த நிலையில், அங்கு ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி கட்சியினர் 22 தொகுதிகளில் மட்டுமே வென்று எதிர்க்கட்சியாக பொறுப்பேற்கவுள்ளனர். ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய நிர்வாகிகளான முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மனிஷ் சிசோடியா ஆகியோரும் தோல்வியை தழுவி இருந்தனர். காங்கிரஸ் 2013ம் ஆண்டுக்கு பின் நடந்த டெல்லி தேர்தலில், தொடர்ந்து பூஜ்யம் உறுப்பினர்கள் என்ற நிலையில், ஹாட்ரிக் பூஜ்ஜியத்தை பெற்றுள்ளது. Teacher Beats Students: கண்மூடித்தனமாக தாக்கும் ஆசிரியர்.. காயத்துடன் பள்ளி மாணவிகள்..!
டெல்லியில் தாமரை மீண்டும் மலர்ந்தது:
இதனால் 27 ஆண்டுகளுக்கு பின்னர் பாஜக டெல்லி மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. கடந்த 2014, 2019, 2024 என அடுத்தடுத்து மூன்று மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி அடைந்தாலும், தலைநகரின் அதிகாரத்தை கைப்பற்ற இயலாமல் இருந்தது. ஆனால், 2025ம் ஆண்டு மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக என டெல்லி மக்கள் கூறும் வகையில், மக்கள் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவளித்து வெற்றிபெற வைத்துள்ளனர். பிரதமர் மோடி வெளிநாட்டு பயணத்தை முடித்துவிட்டு வந்ததும், அம்மாநில முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு, ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. Teenager Dies By Suicide: திருநங்கையுடன் காதல் வயப்பட்ட வாலிபர்.. தந்தையின் கல்லறையில் தற்கொலை..!
டெல்லி முதல்வர் ராஜினாமா:
இந்நிலையில், டெல்லி மாநில முதல்வர் பொறுப்பில் இருந்து அதிஷி ராஜினாமா செய்தார். இதனால் டெல்லி மாநில துணை நிலை ஆளுநர் வி.கே சக்சேனாவை நேரில் சந்தித்த அதிஷி மர்லேனா, தனது ராஜினாமா கடிதம் மற்றும் அமைச்சரவையை களைத்து உத்தரவிட பரிந்துரை கடிதத்தை முழங்கினார். இதன்பேரில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு ஆளுநரால் கலைத்து உத்தரவிடப்படும்.
டெல்லி மாநில முதல்வர் பொறுப்பு ராஜினாமா கடிதத்தை அதிஷி ஆளுநரிடம் வழங்க வந்த காட்சிகள்:
Delhi: AAP leader Atishi Marlena leaves Raj Niwas after submitting her resignation pic.twitter.com/fItL7xdaoF
— IANS (@ians_india) February 9, 2025