Kite Death (Photo Credit: Twitter)

ஜூலை 20, புதுடெல்லி (New Delhi): புதுடெல்லியில் உள்ள பஷிம் விஹார் பகுதியை சேர்ந்த சிறுமி, சம்பவத்தன்று தனது பெற்றோருடன் இருசக்கர வாகனத்தில் குரு ஹர்கிஷன் நகர் பகுதியில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது, அங்கு சீன மாஞ்சா நூல் (Chinese Manjha / Chinese Kite String) இவர்கள் பயணித்த இடத்தில் இருந்ததாக தெரியவருகிறது. இந்த கயிறு சிறுமியின் கழுத்தை அறுத்துள்ளது. இதனை சிறுமியின் கழுத்தில் இருந்து இரத்த்த்தம் வெளியேறி இருக்கிறது.

பதறிப்போன பெற்றோர் சிறுமியை விரைந்து அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்க, அங்கு சிறுமி பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. Comic Con: அமெரிக்காவில் நடைபெறும் காமிக் கான் புத்தக கண்காட்சியில் உலகநாயகன் கமல் ஹாசன்; ரசிகர்கள் உற்சாக வரவேற்பு.!

Death File Pic (Photo Credit: Pixabay)

இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி காவல் துறையினர் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 304 ன் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இத்துயரம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூலை 27ம் தேதி 2022ல் டெல்லி ரோகினி பகுதியை சேர்ந்த இருசக்கர வாகன ஓட்டி சுமித் ரங்கா என்பவர் சீன மாஞ்சா சிக்கி பலியாகினர். அதேபோல, உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ராஜ் குமார் என்பவர் ஆழமான மாஞ்சா கயிறு வெட்டால் பாதிக்கப்பட்டார்.