Heart Attack (Photo Credit: Pixabay)

மே 29, போபால் (Madhya Pradesh News): மத்திய பிரதேச மாநிலம், போபாலில் (Bhopal) உள்ள மிஸ்ரோட் நகரில், ராயல் பாம் வில்லா எனும் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ரிஷிராஜ் பட்நாகர் (வயது 51). இவர், தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில், இவரது 2வது மகன் தேவன்ஷ் (வயது 8), விளையாடிவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக லிப்டில் ஏறியுள்ளார். அப்போது, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மகன் லிப்டில் சிக்கியதைக் கண்டு தந்தை ரிஷிராஜ் அதிர்ச்சியடைந்தார். இதனால் பயத்தில் மாரடைப்பு (Heart Attack) ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். கணவருக்கு தர்பூசணியில் விஷம் கலந்து கொடுத்து கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

மாரடைப்பால் மரணம்:

இதனையடுத்து, மின்சாரம் வந்ததால் லிப்ட் கதவு திறந்து, தேவன்ஷ் பத்திரமாக வெளியே மீட்கப்பட்டார். இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், ரிஷிராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பயத்தில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பே மரணத்துக்கான காரணம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.