Groom Dies Of Heart Attack (Photo Credit: @medineshsharma X)

பிப்ரவரி 17, ஷியாபுர் (Madhya Pradesh News): மத்திய பிரதேச மாநிலம், ஷியாபுரைச் (Sheopur) சேர்ந்தவர் பிரதீப் ஜாட் (வயது 26). இவருக்கு, அங்குள்ள மண்டபம் ஒன்றில் திருமணம் நடைபெறவிருந்தது. இதன் ஒரு பகுதியாக, மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் நடைபெற்றது. இந்நிலையில், மண்டபத்துக்கு அவரை குதிரையில் அமர வைத்து, ஊர்வலமாக உறவினர்கள் அழைத்து வந்தனர். Delhi Earthquake: டெல்லியில் அதிகாலை மிதமான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு.. வல்லுநர்கள் எச்சரிக்கை..!

மணமகன் உயிரிழப்பு:

அப்போது, வாண வேடிக்கை, ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டத்துடன் களைகட்டிய ஊர்வலம், திருமண மண்டப வளாகத்தில் நுழைந்தபோது, குதிரை மீது அமர்ந்திருந்த மணமகன் திடீரென மயங்கி விழுந்தார். உடனே, அவரது உறவினர்களும், நண்பர்களும் அவருக்கு முதலுதவி செய்தனர். எந்த பலனும் அளிக்காததால், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து (Groom Dies) விட்டதாக தெரிவித்தனர். இதனைக் கேட்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். மணமகன் உயிரிழந்ததால், திருமண வீடு, துக்க வீடாக மாறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

வீடியோ இதோ: