ஜூலை 27, ஹரித்வார் (Uttarakhand News): உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வார் மன்சா தேவி அம்மன் கோவில் வட இந்தியாவில் உள்ள முக்கியமான ஏழு அம்மன் கோவில்களில் ஒன்றாகும். இந்த புகழ்பெற்ற கோவிலில் நவராத்திரி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வது வழக்கம். ஆடி மாதத்தில் மன்சா தேவி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து பூஜைகளில் கலந்துகொள்வர். Shocking Video: 12வது மாடியில் இருந்து தவறி விழுந்த 4 வயது குழந்தை.. தாயின் அலட்சியத்தால் சோகம்.!
பக்தர்களுக்குள் திடீர் தள்ளுமுள்ளு :
அந்த வகையில் இன்று அதிகாலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூஜையில் பங்கேற்பதற்காக கோவில் வளாகத்தில் திரண்டிருந்த நிலையில், பக்தர்கள் கூட்டத்தில் திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடும் நெரிசல் ஏற்படவே, ஒருவரையொருவர் தள்ளி வெளியேற முயற்சித்துள்ளனர். பலரும் கீழே விழுந்து அவர்களை மற்ற பக்தர்கள் மிதித்து படுகாயமும் அடைந்தனர். இதன் காரணமாக 6 பக்தர்கள் நெரிசலுக்குள் சிக்கி கோவில் வளாகத்திலேயே உயிரிழந்தனர்.
கூட்ட நெரிசல் ஏற்பட்டதன் காரணம் என்ன?
இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பக்தர்களை அமைதிப்படுத்தி நெரிசலை சீர்படுத்தினர். இதனை தொடர்ந்து உயிரிழந்த பக்தர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில், படுகாயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டதன் காரணம் என்ன? என விசாரணை நடத்தியதில், பக்தர் ஒருவரின் மீது மின்கம்பி பட்டதால் அவர் அலறியதால் அருகில் இருந்தவர்களும் பதற்றமடைந்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹரித்வார் மன்சா தேவி அம்மன் கோவில் கூட்ட நெரிசல் தொடர்பான வீடியோ (Haridwar Mansa Devi Temple) :
#BREAKING: , 6 Dead, Dozens Injured
Tragedy struck early Sunday morning at the Mansa Devi Temple in Haridwar as a stampede claimed the lives of at least six people and left over a dozen others injured.
The incident occurred on the… pic.twitter.com/Z04z24CRAa
— upuknews (@upuknews1) July 27, 2025