
பிப்ரவரி 10, புதுடெல்லி (New Delhi News): நக்ஸல் தீவிரவாதம் நாட்டில் இருந்து 2026 மார்ச் 31-ம் தேதிக்குள் முற்றிலும் ஒழிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் உள்ள பிஜாப்பூர் மாவட்டத்தில், தேசிய வனப்பகுதியில் பதுங்கியிருந்த 31 நக்சலைட்டுகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் பாதுகாப்பு படையினர் தரப்பில் 2 பாதுகாப்பு படையினரும் உயிர்நீத்து இருந்தனர். நக்சல் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நோக்கில் பாதுகாப்புப் படையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் இது குறிப்பிடத்தக்க வெற்றி என்று மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார். IND Vs ENG 3rd ODI: இந்தியா - இங்கிலாந்து மூன்றாவது ஒருநாள் போட்டி: நேரலையில் பார்ப்பது எப்படி? விபரம் உள்ளே.!
அமித் ஷா ட்விட் பதிவு:
இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைப்பதிவில் பதில் அளித்தபோது, இந்தியாவை நக்சல் இல்லாத நாடாக மாற்றுவதற்கான முயற்சிகளில் பாதுகாப்புப் படையினர் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளதாகவும், இந்த நடவடிக்கையில் 31 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாகவும், ஏராளமான ஆயுதங்களும் வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.
2026 க்குள் நக்சல் ஒழிப்பு:
மனிதர்களுக்கு எதிரான நக்சலிஸத்தை கொடுக்கும் நடவடிக்கையின் போது இன்று இரண்டு துணிச்சலான வீரர்களை நாம் இழந்துள்ளோம். இந்த நாயகர்களுக்கு தேசம் எப்போதும் கடன்பட்டிருக்கும். வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 2026 மார்ச் 31-ம் தேதிக்குள் நக்ஸல் தீவிரவாதம் நாட்டிலிருந்து முற்றிலும் ஒழிக்கப்படும் என்றும் நக்ஸலிசத்தால் எந்தவொரு குடிமகனும் தங்கள் உயிரை இழக்காமல் இருப்பது உறுதி செய்யப்படும் என்றும் உள்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
நக்சல் ஒழிப்பு தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வலைப்பதிவு:
नक्सल मुक्त भारत बनाने की दिशा में सुरक्षा बलों ने छत्तीसगढ़ के बीजापुर में बड़ी सफलता हासिल की है। इस ऑपरेशन में 31 नक्सलियों को ढेर करने के साथ ही भारी मात्रा में हथियार और विस्फोटक सामग्री भी बरामद की गयी है।
मानवता विरोधी नक्सलवाद को समाप्त करने में आज हमने अपने दो बहादुर…
— Amit Shah (@AmitShah) February 9, 2025