
மே 22, நல்லமலா (Andhrapradesh News): ஆந்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கர்னூல், நெல்லூர், குண்டூர், பிரகாசம், கடப்பா, சித்தூர் ஆகிய மாவட்டங்களையும், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மகபூப் நகர், நல்கொண்டா மாவட்டங்களையும் இணைத்து வடக்கு தெற்காக நல்லமலா மலைத்தொடர் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த மலைக்காடுகளான இவை அதிகபட்சம் 520 மீட்டர் உயரம் கொண்டவை ஆகும்.
சுற்றுலா தளங்களுடன் ரம்யமான நல்லமலா :
ஆங்காங்கே சிறிய குன்றுகளாகவும், பெரிய மலைத்தொடர்களாகவும் தொடரும் நல்லமலா மலைத்தொடரின் பாறைகளே நமக்கு கடப்பா எனப்படும் கரும்பாறைகளாக கிடைக்கின்றன. ஸ்ரீசைலம் கிருஷ்ணா ஆற்றங்கரையில் உள்ள நீர்மின் நிலையம், பழைமை வாய்ந்த சிவாலயம், நரசிம்மர் கோவில் என பல சுற்றுலா மையங்களுக்கும் நல்லமலா மலைகள் பிரபலமானது. இதனிடையே இந்த வனப்பகுதியில் வசித்து வந்த கரடி ஒன்று சமீபத்தில் குட்டி ஒன்றை ஈன்றதாக தெரிய வருகிறது. Uttar Pradesh Shocker: காதலியை திருமணம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்த வாலிபர்.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
குட்டியை காப்பாற்ற புலியுடன் சண்டையிட்ட காட்சிகள் :
இந்த நிலையில் அந்த குட்டியை புலி ஒன்று சிறிது தூரம் தூக்கி சென்றுள்ளது. இதனை கவனித்த தாய் கரடி புலியிடம் இருந்து தனது குட்டியை காப்பாற்ற ஆக்ரோசத்துடன் சென்று நேருக்கு நேர் சண்டையிட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன. வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் பதிவு செய்த வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தாய்ப்பாசம் என்பது அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது என்பதை இந்த வீடியோ உணர்த்துவதாகவும் பலரும் தெரிவிக்கின்றனர்.
தாய்க்கரடி புலியை துரத்தும் வீடியோ :
పెద్దపులిని ఓడించి.. తన బిడ్డను కాపాడుకున్న ఎలుగుబంటి
నల్లమల అడవుల్లో ఎలుగుబంటి, పెద్దపులి ఫైట్
ఎలుగుబంటి పిల్లపై దాడికి దిగబోయిన పెద్దపులి
ఎలుగుబంటి తిరగబడడంతో అడవిలోకి పరుగులు పెట్టిన పెద్దపులి pic.twitter.com/vaITSIob2T
— Telugu Scribe (@TeluguScribe) May 21, 2025