ஜனவரி 08, எர்வாடா (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே, எர்வாடா பகுதியில் டபிள்யு.என்.எஸ் குளோபல் சர்விசஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் அக்கவுண்டண்ட் பிரிவில் வேலை பார்த்து வரும் பெண்மை சுபதா (Shubhada Shankar Kodare) சங்கர் கோடரெ (வயது 28). இவருடன் பணியாற்றி வரும் சக ஊழியர் கிருஷ்ண (Krishna Satyanarayan Kanaujia) சத்யநாராயண கனஜியா (வயது 30). Nitin Gadkari: சாலை விபத்தில் சிக்கினால் கட்டணமில்லா சிகிச்சை: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.!
வாக்குவாதம் கொலையில் முடிந்தது:
சம்பவத்தன்று இவர்கள் இருவரும் அலுவலகத்தில் இருந்தபோது, வாகன நிறுத்தும் இடத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் உண்டாகியதாக தெரிய வருகிறது. இதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணா, சுபதாவை கடுமையாக தாக்கி இருக்கிறார். இந்த சம்பவத்தில் கடுமையான காயம் அடைந்து இருந்த சுபதா பரிதாபமாக உயிரிழந்தார்.
குற்றவாளி கைது:
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், குற்றவாளி கிருஷ்ண நாராயணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணியிடத்தில் நடந்த கொலை சம்பவம், சக ஊழியர்களிடையே பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.