Virat Kohli Anushka Sharma Couple Second Baby Announcement (Photo Credit: Instagram)

பிப்ரவரி 20, புதுடெல்லி (New Delhi): கடந்த 2008ம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி, இன்று முன்னணி வீரர்களில் ஒருவராக இருக்கும் விராட் கோலி (Virat Kohli), திரைத்துறையை சேர்ந்த முன்னணி நடிகை அனுஷ்கா சர்மாவை (Anushka Sharma) கடந்த 2018ம் ஆண்டு கரம்பிடித்தார். காதலித்து கரம்பிடித்த ஜோடிகள் இருவரும் மகிழ்ச்சியாக உலகைசுற்றி வந்தனர். இருவரின் அன்புக்கு அடையாளமாக கடந்த 2021 ஜனவரி மாதம் பெண் குழந்தையை பெற்றெடுத்தனர். குழந்தைக்கு வாமிகா என பெயரிட்டு அன்புடன் வளர்த்து வருகிறார்கள். Ear Rings Stolen from Jewelry: பட்டப்பகலில் 4 பேர் கும்பலால் நகைக்கடையில் கைவரிசை; அதிர்ச்சியூட்டும் வைரல் காட்சிகள்.. வியாபாரிகளே கவனம்.!

இரண்டாவது குழந்தையை ஈன்றெடுத்த அனுஷ்கா சர்மா: கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பது உறுதியாகி, தம்பதிகள் தங்களின் இரண்டாவது குழந்தைக்காக காத்திருப்பது தெரியவந்தது. கடந்த பிப்ரவரி 15ம் தம்பதிகளுக்கு குழந்தை பிறந்ததாகவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், குழந்தைக்கு தம்பதிகள் அகாய் (Akay) என பெயரிட்டுள்ளனர். இந்த தகவலை தங்களின் சமூகவலைத்தளபதிவுகள் வாயிலாக தெரிவித்து இருக்கின்றனர். இதனால் அவர்களின் ரசிகர்கள் உற்சாகமடைந்த மகிழ்ச்சிப்பட வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Virat Kohli (@virat.kohli)