Chhattisgarh Bemetara Accident (Photo Credit: @ANI X)

ஏப்ரல் 29, பேமேதரா (Chhattisgarh News): சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பேமேதரா மாவட்டம், பாதரனா கிராமத்தை சேர்ந்த நபர்கள், தங்களின் குடும்ப நிகழ்ச்சிக்காக அங்குள்ள திரய்யா கிராமத்திற்கு சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் தங்களுக்கு சொந்தமான மினி லாரி ஒன்றில் பயணம் செய்துள்ளனர். பின் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு நள்ளிரவு நேரத்தில் தங்களின் கிராமம் நோக்கி பயணித்துள்ளனர்.

நொடியில் நடந்த விபத்தில் சோகம்: இடையில், இவர்களின் வாகனம் அங்குள்ள கதியா கிராமத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்தது. வாகனத்தில் மொத்தமாக 40 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்து இருந்தனர். இந்நிலையில், சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனத்தின் மீது, (Truck Collison In Chhattigarh) அவ்வழியே பயணித்த கனரக லாரி ஒன்று பலமாக மோதியுள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த விபத்தில், வாகனத்தில் இருந்த 23 பேர் படுகாயம் அடைந்தனர். கனரக வாகனம் பலரின் மீது ஏறி இறங்கி நின்றது. Chengalpattu Shocker: தெப்பக்குளத்தில் நீச்சலடித்து விபரீத முயற்சி; நண்பர் கண்முன் நீரில் மூழ்கி இளைஞர் பரிதாப பலி.! 

மீட்பு பணிகள் தீவிரம்: காயமடைந்தோர், உயிருக்கு போராடியோரின் (Chhattisgarh Accident) அலறல் விபத்து நடந்த இடத்தினை கண்ணீர் துயரத்திற்குள்ளாக்க, அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், உடனடியாக உயிருக்கு போராடியவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.

5 பெண்கள், 3 குழந்தைகள் பரிதாப பலி: விசாரணையில், இவர்கள் அனைவரும் குடும்ப நிகழ்ச்சிக்காக சென்றுவிட்டு, மீண்டும் வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்த வழியில் விபத்து நடந்தது தெரியவந்தது. விபத்தில் உயிரிழந்தவர்களில் பூரி நிஷாத் (வயது 50), நீரா சாஹு (வயது 55), கீதா சாஹு (வயது 60), அக்னியா சாஹு (வயது 60), குஷ்பூ சாஹு (வயது 39), மது சாஹு (வயது 5), ரிகேஷ் நிஷாத் (வயது 6), ட்விங்கிள் நிஷாத் (வயது 6) என்பது உறுதி செய்யப்பட்டது. Cuddalore Shocker: கள்ளத்தனமாக மது விற்பனை; போலீசுக்கு போன் போட்டதால் உயிருக்கு பயந்து தலைமறைவான நபர்..! 

ஆறுதல் கூறிய பாஜக எம்.எல்.ஏ: இவர்களை தவிர்த்து 23 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் கவலைக்கிடமான வகையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 பேர் மேல் சிகிச்சைக்காக ராய்ப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து தகவல் அறிந்த பாஜக எம்.எல்.ஏ திபேஷ் சாஹு, மருத்துவமனைக்கு நேரில் சென்று காயமடைந்தோருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், தேவையான அனைத்து உதவிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என கூறினார்.