ஏப்ரல் 29, திருப்போரூர் (Chengalpattu News): சென்னையில் உள்ள குரோம்பேட்டை (Chrompet), ராதா நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த்பாபு. இவர் நேற்று தனது நண்பருடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் ஸ்ரீ முருகன் (Thiruporur Sri Murugan Temple) கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அங்கு சாமி தரிசனம் செய்த ஆனந்த பாபு, கோவில் வளாகத்தில் உள்ள தெப்பக்குளத்தை கண்டு மகிழ்ந்துள்ளார்.

தடுப்புகளை மீறி சென்று நீந்திய இளைஞர்: தெப்பக்குளத்தில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி குளிக்க அனுமதி இல்லை என்பதால், காவல்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தடுப்புகளை மீறி தெப்பக்குளத்திற்குள் இறங்கிய ஆனந்த பாபு, தெப்பக்குளத்தை நடுவே உள்ள மண்டபத்திற்கு நீந்திச்செல்ல முடிவெடுத்துள்ளார். Cuddalore Shocker: கள்ளத்தனமாக மது விற்பனை; போலீசுக்கு போன் போட்டதால் உயிருக்கு பயந்து தலைமறைவான நபர்..! 

சடலமாக மீட்ட அதிகாரிகள்: நீரில் நீந்திச்சென்ற ஆனந்த பாபு, மண்டபத்திற்கு செல்வதற்குள் பாதி தூரத்தில் நீரில் மூச்சுத்திணறி மூழ்கி இருக்கிறார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், அதிகாரிகள் விரைந்து வந்து அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள திருப்போரூர் நகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாய் கண்ணீர் கதறல்: ஆனந்த்பாபுவின் மறைவை அறிந்து திருப்போரூர் காவல் நிலையத்திற்கு வந்த அவரின் தாய் மற்றும் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். ஆனந்த்பாபுவின் தாய் தனது மகனை இழந்து கதறியழுதது அங்கிருந்தோரிடையே சோகத்தை ஏற்படுத்தியது.