ஏப்ரல் 19, பிஜப்பூர் (Chhattisgarh News): இந்திய தேர்தல்கள் 2024 (General Elections 2024), முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதியான இன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு, சத்தீஸ்கர், பீகார், பீகார், உத்திரபிரதேசம், மேற்குவங்கம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்திரகாண்ட் ஆகிய மாநிலங்களில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதி மற்றும் புதுச்சேரியில் உள்ள 01 தொகுதி சேர்ந்து 40 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தவிர்த்துள்ள எஞ்சிய மாநிலங்களில் சொற்ப அளவிலான தொகுதிகள் சேர்ந்து இன்று 102 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.

மாநில வாரியாக முதற்கட்ட வாக்குப்பதிவு விபரம்: அருணாச்சல பிரதேசம் (2 தொகுதிகள்), அசாம் (5 தொகுதிகள்), பீகார் (4 தொகுதிகள்), சத்தீஸ்கர் (1 தொகுதி), மத்திய பிரதேசம் (6 தொகுதிகள்), மகாராஷ்டிரா (5 தொகுதிகள்), மணிப்பூர் (2 தொகுதிகள்), மேகாலயா (2 தொகுதிகள்), மிசோரம் (1 தொகுதி), நாகாலாந்து (1 தொகுதிகள்), ராஜஸ்தான் (2 தொகுதிகள்), சிக்கிம் (1 தொகுதி), திரிபுரா (1 தொகுதி), உத்தரப் பிரதேசம் (8 தொகுதிகள்), உத்தரகாண்ட் (5 தொகுதிகள்), மேற்கு வங்கம் (3 தொகுதிகள்), அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் (1 தொகுதி), ஜம்மு மற்றும் காஷ்மீர் (1 தொகுதி), லட்சத்தீவு (1 தொகுதி) என 102 தொகுதிக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. Actor Vijay Casting Vote: ரசிகர்கள் புடைசூழ ஜனநாயக கடமையாற்றிய நடிகர் & தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய்.! 

ஐஇடி குண்டுவெடித்து சிஆர்பிஎப் துணை கமாண்டர் படுகாயம்: இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பாஸ்டர் (Bastar) தொகுதிக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் வழங்கி வருகின்றனர். இந்நிலையில், அங்குள்ள பீஜப்பூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இருக்கும் பரிராம்கர்க், சிஹகா கிராமத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கு அருகே ஐஇடி (IED Bomb Blast Voting Booth) குண்டு வெடித்ததில் சிஆர்பிஎப் படையின் துணை கமாண்டர் படுகாயம் அடைந்தார். அவர் மருத்துவ சிகிச்சைக்காக பாரிராம்கர்க் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தை பொறுத்தமட்டில் நக்சல்களின் செயல்பாடுகள் அதிகம் என்பதால், அங்கு மிகுந்த கவனத்துடன் தேர்தல் பரப்புரை மற்றும் பிற செயல்பாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலும் சிஆர்பிஎப் வீரர் பணியில் ஈடுபட்டு இருக்கும்போதே ஐஇடி வெடிகுண்டு வெடித்து காயமடைந்துளளது நடந்துள்ளது.