Infant Baby Rescued from Toilet (Photo Credit: @Gagan4344 X)

டிசம்பர் 25, சத்தீஸ்கர் (Chhattisgarh News): சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள செக்டர் 43 பேருந்து நிறுத்தத்தில் பெண்கள் கழிவறை உள்ளது. சம்பவத்தன்று குழந்தையின் அழுகுரல் பெண்கள் கழிவறையில் (Baby Boy Found Toilet) இருந்து கேட்டுள்ளது. இதனைக்கேட்டு அதிர்ந்து போன பொதுமக்கள், கழிவறைக்குள் சென்று பார்த்த போது பிறந்த ஏழு நாட்கள் மட்டும் ஆன பச்சிளம் குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டது. Serbia Violence: செர்பிய தேர்தலில் முறைகேடு?.. எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் தொடர் போராட்டம்.. அரசு அலுவலகத்தை அடித்து நொறுக்கிய போராட்டக்காரர்கள்.! 

ஜோடியாக வந்து குழந்தையை தவிக்கவிட்டு சென்ற தம்பதி: உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள் குழந்தையை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், பெண்மணி ஒருவர் தனது ஆண் நண்பருடன் பேருந்து நிலையத்திற்கு வந்ததும், குழந்தையுடன் பேருந்து நிலையத்திற்கு வந்த பெண்மணி கழிவறையில் குழந்தையை வைத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றதும் தெரியவந்தது.

காவல்துறை விசாரணை: பேருந்து நிறுத்தத்தில் இருந்து பதான்கோட் பகுதிக்கு செல்ல இருவரும் டிக்கெட் வாங்கி பயணித்துள்ளனர். இந்த விஷயத்தை கண்டறிந்த அதிகாரிகள் தொடர்ந்து தம்பதிக்கு வலைவீசி இருக்கின்றனர். ஜோடியாக வந்தது யார்?. எதற்காக குழந்தையை கழிவறையில் கைவிட்டுச் சென்றனர்? என விசாரணை நடைபெறுகிறது.

வேதனையின் உச்சம்: "பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு (Tamil Proverb)" என்ற சொல்வழக்கு பழமொழி கிராமப்புறங்களில் முன்பு அதிகம் பயன்படுத்தியது உண்டு. ஆனால், அவற்றை கண்ணெதிரே பார்க்கும் வகையில் நடக்கும் துயரங்கள் இன்றளவில் நடப்பது தான் வேதனையின் உச்சமாக இருக்கிறது.