Delhi Dayalpur Girl Rape Case (Photo Credit : @htTweets / @bharattvusa X)

ஜூன் 09, டெல்லி (Delhi News): டெல்லியில் உள்ள தயாள்பூர் பகுதியில் 9 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று சிறுமி, உறவினர் ஒருவருக்கு ஐஸ் கொடுப்பதற்காக வெளியே சென்றதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் அவர் வீட்டுக்கு வரவில்லை. இதனால் பதறிப்போன சிறுமியின் பெற்றோர் மகளை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேரு விகார் பகுதியில் விசாரித்த போது, அங்குள்ள பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர் சிறுமியை தனது பிளாட்டுக்கு அழைத்துச் சென்றதாக கூறி இருக்கின்றனர். Gas Cylinder Biometric: சமையல் எரிவாயு வாங்க இனி இது கட்டாயம் - அரசு அதிரடி அறிவிப்பு.! 

அதிக ரத்தம் வெளியேறி உயிரிழந்த சிறுமி :

இதனை அடுத்து வீட்டின் கதவை உடைத்துப் பார்த்தபோது சிறுமி ஒரு சூட்கேசின் உள்ளே ஆடைகள் களையப்பட்ட நிலையில் சுயநினைவு இன்றி இருந்துள்ளார். உடனடியாக மீட்கப்பட்ட சிறுமி அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டபோது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. மேலும் அந்தரங்க பகுதியில் அதிக ரத்தம் வெளியேறியதால் சுயநினைவு இழந்ததாகவும் தெரிவித்துள்ளனர். தொடர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

வீதியில் இறங்கி மக்கள் போராட்டம் :

இதனை தொடர்ந்து தனது மகளுக்கு நேர்ந்த கொடுமை குறித்து காவல் நிலையத்தில் சிறுமியின் தந்தை புகாரளித்துள்ளார். இதனிடையே சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக தகவலறிந்த உள்ளூர் மக்கள், சிறுமிக்கு உடனடி நீதி கிடைக்க வேண்டுமென திடீரென வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதனால் காவல்துறையினர் நேரில் சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

குற்றவாளியை கைது செய்ய உறவினர்கள் போராட்டம் :

பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:

சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3