AC Compressor Exploded (Photo Credit: @lavelybakshi X)

மார்ச் 13, கிருஷ்ண நகர் (Delhi News): டெல்லியில் உள்ள கிருஷ்ணா நகர் பகுதியில் வசித்து வருபவர் மனோகர் லால். இவர் ஏசி மெக்கானிக் கடையில் வேலை பார்த்து வருகிறார். இன்று காலை வழக்கம்போல பணிக்கு வந்தவர், தனது பணியை கவனித்துக்கொண்டு இருந்தார். ஏசி ஒன்றை அவர் பழுதுநீக்கம் செய்துகொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அச்சமயம், எதிர்பாராத விதமாக ஏசி கம்ப்ரஸர் திடீரென வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் ஏசியை பழுதுநீக்கம் செய்துகொண்டு இருந்த மனோகர் லால் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். Shocking Video: ஒரேயொரு நொடிதான்.. சாய்ந்த மாபெரும் கதவு.. நூலிடையில் தப்பிய உயிர்.. நெஞ்சை பதறவைக்கும் காட்சி.! 

ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்:

மேலும், அவரின் கடை அருகிலேயே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, செல்போன் பார்த்துக்கொண்டு இருந்த நபர் லேசான காயத்துக்கு உள்ளாகினர். வெடிச்சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், மனோகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்தவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஏசி கம்ப்ரஸர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் மனோகர் லால் உயிரிழந்தது தெரியவந்தது. விபத்து தொடர்பான பதறவைக்கும் காட்சிகளும் வெளியாகி இருக்கின்றன.

ஏசி கம்ப்ரஸர் வெடித்து விபத்து ஏற்படும் பதறவைக்கும் காட்சிகள்: