Delhi Blast on 20-Oct-2024 (Photo Credit: @ANI X)

அக்டோபர் 20, புதுடெல்லி (New Delhi): புதுடெல்லி மாநிலத்தில் உள்ள ரோகினி மாவட்டம் (Rohini Blast), பிரசாந்த் விஹார் பகுதியில் சிஆர்பிஎப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று காலை 07:47 மணியளவில், பள்ளியின் வாசல் பகுதியில் உள்ள கடைக்கு அருகில் பயங்கர வெடிச் சத்தம் கேட்டுள்ளது. Car Plunged Into Pond: கார் ஓட்டிப் பழகியபோது கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் பாய்ந்த சம்பவம்.. பதற வைக்கும் வீடியோ வைரல்..!

காவல்துறை விசாரணை:

இந்த விஷயம் குறித்து காவல்துறை கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், மேற்பார்வை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்டமாக வெடி விபத்து நிகழ்ந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது

வெடிபொருட்களால் நிகழ்ந்த வெடி விபத்தா? வேறு ஏதேனும் சதிச்செயலா? என விசாரணை தொடருகிறது.

வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட களநிலவரக் காட்சிகள்:

வீடியோ நன்றி: ஏஎன்ஐ