Social Media (Photo Credit : Pixabay)

மே 22, நங்கோலி (Delhi News): டெல்லியில் வசித்து வரும் 30 வயதுடைய பெண்மணி ஒருவர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் தனது பெயர் மற்றும் விபரங்களை பயன்படுத்தி மர்மநபர்கள் போலியான பேக் ஐ.டி ஒன்றை தொடங்கியுள்ளனர். இந்த கணக்கு மூலமாக எனது நண்பர்கள் மற்றும் உறவினர்களை தொடர்பு கொண்டு தொந்தரவு செய்து வருகின்றனர். அவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், போலிகணக்கு வைத்திருப்பவர் குறித்த விபரத்தை கண்டறிந்துள்ளனர். Uttar Pradesh Shocker: காதலியை திருமணம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்த வாலிபர்.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்..! 

போலிக்கணக்கு தொடங்கி தொந்தரவு செய்த இளம்பெண் :

அந்த சிம்கார்டு உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள காசிபூர் பகுதியில் வாங்கப்பட்டது என்பது தெரிய வரவே, தற்போது அதனை பயன்படுத்தி வரும் நபரின் வீட்டிற்க வீட்டிற்கு சென்றுள்ளனர். டெல்லியில் உள்ள நங்கோலி பகுதியில் வசித்து வரும் 26 வயது இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் விசாரணை நடந்தது. அப்போது இளம்பெண்ணின் பெயரில் போலியான கணக்கு தொடங்கி அவரின் உறவினர்கள், நண்பர்களை தொந்தரவு செய்ததை ஒப்புக்கொண்டார்.

கணவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அதிர்ச்சி செயல் :

இது தொடர்பாக அவர் கூறுகையில், கடந்த 2023 ஆம் ஆண்டு எனக்கு திருமணம் நடந்தது. எனது கணவர் சமூக வலைதளபக்கத்தில் ஒரு பெண்ணின் புகைப்படத்தை பகிர்ந்ததால் அந்தப் பெண்ணுக்கும், கணவருக்கும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தில் இவ்வாறான செயலை மேற்கொண்டேன். முதலில் அந்த பெண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பிய போது அவர் பதில் அளிக்கவில்லை. இதனால் சந்தேகம் அதிகரித்து போலியான கணக்கு தொடங்கி இவ்வாறு செய்தேன் எனக் கூறியுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் பெண்ணிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.