Kolathur AC Sivakumar | Formula 4 in Chennai (Photo Credit: @IeTamil / @Udhaystalin X)

செப்டம்பர் 01, சென்னை (Chennai News): தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ரேசிங் புரோமோஷன் நிறுவனம் சார்பில், சென்னையில் பார்முலா 4 கார் (Formula 4 Street Race Chennai) இந்தியன் சாம்பியன்ஷிப், இந்தியன் ஸ்ட்ரீட் ரேஸிங் லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் அனைத்தும் விறுவிறுப்புடன் செய்யப்பட்டுள்ள நிலையில், எப்ஐஏ சார்பில் நேற்று இரவு போட்டிக்கு இறுதிக்கட்ட அனுமதி வழங்கப்பட்டது.

பயிற்சி சுற்றுகள் நடந்தது:

இதனால் 3.7 கி.மீ சுற்றுச்சாலையில் தீவுத்திடலில் தொடங்கும் போட்டி, போர் நினைவுச்சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை வழியாக மீண்டும் தீவுத்திடலை வந்தடையும். இதன் மொத்த தூரம் 3.7 கி.மீ ஆகும். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்த பந்தய பரிசீலனை பயிற்சி சுற்றுகள் விறுவிறுப்புடன் நடைபெற்றன. பல வீரர்கள் தங்களின் காரில் சாகசம் செய்தும் பார்வையாளர்களை கவர்ந்தனர். Moto G35 5G: அசத்தலான அம்சங்களுடன் மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.. முழு விவரம் உள்ளே..!

தெற்காசியாவில் முதல் முறை:

செப்டம்பர் 01 ம் தேதியான இன்று முதல் தகுதிச்சுற்றுகள் தொடங்கி அடுத்தடுத்து விறுவிறுப்புடன் போட்டிகள் நடைபெறுகின்றன. இதனால் பார்வையளர்கள் பலரும் இன்று போட்டி நடைபெறும் இடத்திற்கு வர தயாராகி இருக்கின்றனர். ஆசியாவிலேயே இரவு நேர பார்முலா பந்தயம் சென்னையில் தான் முதன் முதலாக நடத்தப்படுகிறது என்பதால், கார் ரேஸ் விரும்பிகளும் அங்கு குவிந்துள்ளனர்.

காவல் உதவி ஆணையர் பரிதாப மரணம்:

இதனிடையே, பார்முலா 4 கார் பந்தயத்திற்கான பாதுகாப்பு பணிகள் ஈடுபட்டு இருந்த கொளத்தூர் காவல் உதவி ஆணையர் சிவகுமார், நேற்று பணியின்போது நெஞ்சுவலியால் பரிதாபமாக உயிரிழந்தார். மயக்கமடைந்த அவர் அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மறைந்த காவலரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், ரூ.25 இலட்சம் அரசின் சார்பில் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். காவல் உதவி ஆணையர் மாரடைப்பால் பலியானது, சக காவலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.