ATM Machine / Cash (Photo Credit : Pixabay)

மே 19, ஹைதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் யாகுத் புரா பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் நேற்று ஒரு நபர் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது தனது ஏடிஎம் கார்டை நுழைத்தவர் ரூ.3000 பதிவு செய்த நிலையில், அவருக்கு எந்திரத்தில் இருந்து ரூ.4000 வந்துள்ளது. இதனால் குழப்பமடைந்தவர் தனது கணக்கில் எவ்வளவு பணம் எடுக்கப்பட்டுள்ளது என பார்த்தபோது வங்கிக்கணக்கில் ரூ.3000 மட்டுமே எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. Hyderabad Fire: ஏசி வெடித்து 9 பேர் உயிரிழப்பு.. உறங்கி கொண்டிருந்தவர்களுக்கு நேர்ந்த சோகம்..! 

போட்டி போட்டு பணத்தை எடுத்த மக்கள் :

இதனை தொடர்ந்து அதேபோல மற்றொரு நபருக்கும் ரூ.4000 வந்ததால் இந்த தகவல் காட்டுத்தீப்போல அப்பகுதியில் உள்ளவர்களிடையே பரவியுள்ளது. இதனால் ஏடிஎம் வாசலில் பணம் எடுக்க குவிந்த பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு பணத்தை எடுத்துள்ளனர். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகமாகவே போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏடிஎம் மையத்தை பூட்டிய காவல்துறையினர் :

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை விரட்டிய நிலையில், வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் வந்து சோதனை செய்தபோது தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதிக அளவில் பணம் வெளியே வந்தது தெரியவரவே, ஏடிஎம் மையத்தை காவல்துறையினர் பூட்டினர். மேலும் மக்கள் பணம் எடுக்காமல் இருப்பதற்காக பாதுகாப்பும் போடப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏடிஎம்மில் பணம் எடுக்க முண்டியடித்த மக்கள் :