ஏப்ரல் 25, பெங்களூர் (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் கடுமையான தண்ணீர் பஞ்சம் பிரச்சனை நிலவி வருகிறது. இதனால் மக்கள் அன்றாட பயன்பாடுகளுக்கு நீரை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் பரிதவித்தும் வருகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் பெங்களூரில் உள்ள மக்கள் நீருக்காக என்ன? செய்யப்போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. Chitra Pournami 2024: குமரி முனை முக்கடல் சங்கமத்தில் சித்திரை பௌர்ணமி... மக்கள் ஏமாற்றம்..! 

தண்ணீர் குடித்த குரங்கு: பெங்களூர் மாநகருக்குள் ஏற்பட்டுள்ள நீர் தட்டுப்பாடு பிரச்சனையானது, மனிதர்களை மட்டுமல்லாது விலங்குகளையும் கடுமையாக பாதித்துள்ளது. இதனால் வீதிகளில் திரியும் நாய், குரங்கு உட்பட பல விலங்குகளும் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. இந்நிலையில், குரங்கு ஒன்று வீட்டிற்குள் புகுந்து பில்டர் தண்ணீர் குடித்த சம்பவம் நடந்துள்ளது. பெங்களூரில் பதிவு செய்யப்பட்டதாக வைரலாகும் வீடியோ ஒன்றில், குரங்கு ஒன்று வீட்டின் சமையல் அறைக்குள் நுழைந்து நீரை குடிக்கிறது. வீட்டில் இருந்தவர் இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ததைத்தொடர்ந்து வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.