
ஜூன் 05, உத்திரப்பிரதேசம் (Uttar Pradesh News): உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மொராதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் லக்கன் சிங். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இவரது 2 வயதுடைய மகன் ஆரவ். சம்பவத்தன்று இவர்களின் வீட்டில் குரங்குகள் அட்டகாசம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் குழுவாக வந்த குரங்குகளை விரட்ட லக்கன்சிங் கோடாரியை தூக்கி வீசி இருக்கிறார். Trending Video: இன்ஸ்டா ரீல்ஸ் மோகத்தால் 6 சிறார்கள் பரிதாப மரணம்.. ஆற்றோடு அடித்து செல்லப்பட்ட சோகம்.!
2 வயது சிறுவன் மரணம் :
அப்போது அவரது 2 வயது மகன் எதிர்பாராத விதமாக குறுக்கே வந்த நிலையில், அவரது கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் படுகாயமடைந்த சிறுவனை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதி செய்த நிலையில், சிறுவன் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்காமல் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மரணத்தில் சந்தேகம் :
தகவலறிந்து வந்த காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் லக்கன் சிங் தனது மனைவி அனிதாவிடம் சண்டையிட்டபோது குழந்தையை கொலை செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் சிறுவனின் மர்ம மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.