
ஜூன் 01, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு, தேவனஹள்ளி, விசுவநாதபுரா பகுதியில் வசித்து வந்தவர் நாகரத்னா (வயது 38). இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில், கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். நாகரத்னாவின் கணவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில், குடும்ப தகராறு காரணமாக இருவரும் அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. உணவு மற்றும் பல விஷயங்களுக்காக இந்த தகராறு தொடர்ந்துள்ளது.
தற்கொலை செய்த பெண்மணி :
சம்பவத்தன்று இரவு சாப்பிடுவதற்காக பெண்மணி குடும்பத்தினரை அழைத்த நிலையில், குழந்தைகள் மற்றும் அவரின் கணவர் சாம்பார் நன்றாக இல்லை என்று கூறியதாக தெரிய வருகிறது. இதன் காரணமாக இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதில், மனமுடைந்த நாகரத்னா வீட்டில் அனைவரும் தூங்கிய பின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெண்மணி தூக்கில் பிணமாக தொங்கியதை கண்ட கணவர் கதறியழவே, குடும்பத்தினர் இது தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். 130 பெண்களுடன் சல்லாப வாழ்க்கை.. பாஜக பிரமுகரின் மகனுக்கு ஆப்பு.. மனைவி பரபரப்பு புகார்.!
போலீசார் விசாரணை :
புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பெண்மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில், இது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குழந்தைகள் மற்றும் கணவர் நாகரத்னாவின் சாம்பார் நன்றாக இல்லை என்று கூறியதே அவர் தற்கொலை செய்ததற்கான காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
நடந்தது என்ன?
இதனை தொடர்ந்து நாகரத்னாவின் பெற்றோர், தங்களது மகளை கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், இதன் காரணமாக அவர் மகளைக் கொன்று விட்டு தற்கொலை செய்தது போல நாடகமாடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து தற்போது காவல்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:
சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3